அமெரிக்க ஆயுதக்கப்பல் விவகாரம் ; மார்ச் 14 வரை காவல் நீட்டிப்பு
தூத்துக்குடி : அமெரிக்க ஆயுதக்கப்பல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 41 பேருக்கும் தூத்துக்குடி முதலாவது குற்றவியல் கோர்ட்டில் மார்ச் 14 வரை நீதிமன்றக்காவல் நீட்டித்தும் அன்று 41 பேரையும் நேரில் ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவிட்டது. அமெரிக்க ஆயுதக்கப்பல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வெளி நாட்டினர் 23 பேர் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் 12 பேரும், கப்பலுக்கு டீசல் கடத்திய வழக்கில் 6 பேரும் சேர்த்து 18 பேர் பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நீதி மன்றக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இவர்களுக்கு முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி கதிரவன் வீடியோ கான்பரன்சிங் முறையில் மார்ச் 14 வரை நீதிமன்றக்காவலை நீட்டித்தும், அன்றைய தினம் 41 பேரையும் நேரில் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment