அரசு தேர்வுப்பணியில் ஈடுபட்டு வரும் "ரூட் ஆபீசர்கள்' பணிச்சுமையால் புலம்பல்
தூத்துக்குடி : அரசு தேர்வுப்பணியில் ஈடுபட்டு வரும் ரூட் அபீசர்கள் பணிச்சுமை காரணமாக தவித்து வருகின்றனர்.இரு வேறு பணிகளை பார்க்கும் இவர்களுக்கு உழைப்பூதியம் குறைவாக வழகப்படுவதாக புகார் தெரிவித்தனர். அரசு பொது தேர்வுப்பணிகள் சர்பில் வினாத்தாள், விடைத்தாள்களை சேகரித்து வழங்க புதியதாக ரூட் ஆபீசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் வினாத்தாள் கஸ்டோடியன் பாய்ண்டுகளில் இருந்து 18 கி.மீ., சுற்றுளவில் உள்ள நான்கு அல்லது ஐந்து பள்ளிகளுக்கு நியமீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காலை ஏழு மணிக்குகாரில் கஸ்டோடியன் பாய்ண்டுகளில் இருந்து பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு, வினாத்தாள்களை எடுத்துக் கொண்டு காலை 9 மணிக்குள், தங்களுக்கெனஒதுக்கப்பட்ட பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும். பின் இறுதியாக வினாத்தாள் கொடுக்கும் பள்ளியில் பறக்கும் படை அலுவலராக பணியாற்றிட வேண்டும். பின் தேர்வு முடிந்த பின்பு விடைத்தாள்களை சேகரித்து கொண்டு
கஸ்டோடியன் பாய்ண்டில் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் ஒவ்வொரு தேர்வு மையத்தின் வருகைப்பதிவேடு, ஐந்து வினாத்தாள்கள், விடைத்தாள்கள், உட்பட அனைத்தும் சேகரித்து கொண்டு கஸ்டோடியன் பாய்ண்ட் வந்து சேர மாலை ஆறு மணி வரை பணியாற்ற வேண்டிய கட்டாய நிலை உள்ளஐ. இதில் தேர்வு அறைக்கண்காணிப்பாளர்களுக்கு பணகள் குறைவு இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு உழைப்பூதியமாக 92 ரூபாய் வழங்கப்படுகிறது. ரூட் ஆபீசர்களுக்கும் இதே 92 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.ரூட் ஆபீசர், பறக்கும் படை ஆகிய இரு பணிகளையும் பார்க்கும் இவர்களுக்கு குறைந்த அளவில்உழைப்பூதியம் வழங்கப்படுவதால் புலம்பி வருகின்றனர். . ரூட் ஆபீசர்கள், அல்லது பறக்கும் படை அலுவலர்கள் இதில் ஏதாவது ஒரு பணி மட்டுமே வழங்கப்பட வேண்டும்.அப்படியில்லை என்றால் இருபணிக்கும் உழைப்பூதியம் அதிகரித்து வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment