Search This Blog

Tuesday, 4 March 2014

விசைப்படகு-நாட்டுப்படகு மீனவர்கள் பிரச்னை: ரூ.ஒரு கோடி மதிப்புள்ள படகு எரிப்பு

விசைப்படகு-நாட்டுப்படகு மீனவர்கள் பிரச்னை: ரூ.ஒரு கோடி மதிப்புள்ள படகு எரிப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே பெரியதாழையில் கரைப்பகுதியில் மீன் பிடித்த விசைப்படகு தீ வைத்து கொளுத்தப்பட்டது. தூத்துக்குடியை சேர்ந்தவர் டேவிட் என்பவருக்கு சொந்தமான செல்வமாதா விசைப்படகில் 11 மீனவர்களுடன் படகு டிரைவர் அசோக் என்பவர் ஓட்டி வந்தார். பெரியதாழை பகுதியில் கரைப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர், விசைப்படகுகள் ஆழ் கடலில் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும். கரைப்பகுதியில் மீன் பிடித்ததால் ஆத்திரமடைந்தநாட்டுப்படகு மீனவர்கள் விசைப்படகனை நடுக்கடலில் முற்றுகையிட்டனர். அதிலிருந்த மீனவர்களை சிறைபிடித்துள்ளனர். விசைப்படகுக்கு தீ வைத்தனர். நடுக்கடலில் விசைப்படகு எரிந்து சாம்பலாகியது. இது மீனவர்களுக்கிடையே பிரச்னை ஏற்படுத்தியுள்ளது. விசைப்படகு குறித்து அதிகாரிகள் தெரிவித்தாவது: விசைப்படகில் எரிக்கப்பட்ட படகு மிகப்பெரியதாகும். இந்த படகு மத்திய அரசின் கடல் பொறள்கள் ஏற்றுமதி ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்தப்படகில் 75 அடிக்கு அதிகமான நீளம் கொண்டதாகும். இதில் அதி நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். எரிக்கப்பட்ட படகின் மதிப்பு குறைந்த பட்சம் ஒரு கோடிரூபாய் மதிப்புடையாதாகும், என தெரிவித்தனர். மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் இரதப்பு மீனவர்களிடையே பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இரு தரப்பு மீனவர்களிடமும் சமரசம் பேசி வருகின்றனர்.

No comments:

Post a Comment