இயக்குநர் பாலசந்தர் மரணம் : அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
சென்னை : பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால், நேற்று காலமானார். அவரது உடலுக்கு நடிகர்கள் விஜய், அர்ஜூன், மனோரமா, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைபிரபலங்களும், திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
தாதாசாகிப் பால்கே, பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பாலசந்தர், நீர்குமிழி, பாமா விஜயம், இருகோடுகள், அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், அவர் ஒரு தொடர் கதை, வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி, அக்னி சாட்சி, தண்ணீர் தண்ணீர், அழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். மேலும் ரயில் சிநேகம், கையளவு மனசு, சஹானா உள்ளிட்ட பல நெருந்தொடர்களையும் இயக்கி உள்ளார்.


தாதாசாகிப் பால்கே, பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பாலசந்தர், நீர்குமிழி, பாமா விஜயம், இருகோடுகள், அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், அவர் ஒரு தொடர் கதை, வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி, அக்னி சாட்சி, தண்ணீர் தண்ணீர், அழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். மேலும் ரயில் சிநேகம், கையளவு மனசு, சஹானா உள்ளிட்ட பல நெருந்தொடர்களையும் இயக்கி உள்ளார்.
சில மாதங்களுக்கு முன், பாலசந்தரின் மகன் கைலாசம் இறந்தார். இதனால், பாலசந்தர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். பத்து நாட்களுக்கு முன், காய்ச்சல், மூச்சுத்திணறலால் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல், வயோதிக பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திடீரென, சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சிக்கலான நிலையை அடைந்தார். டாக்டர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி, நேற்று இரவு காலமானார். இவருக்கு, மனைவி ராஜம், மகள் புஷ்பா கந்தசாமி, மகன் பிரசன்னா ஆகியோர் உள்ளனர். பாலசந்தர் இறந்தது அறிந்து, இயக்குனர், நடிகர்கள், சினிமா பிரபலங்களும் மருத்துவமனையில் கூடினர். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இன்று மாலை பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பாலசந்தர் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தலைவர்கள், நடிகர்கள்அஞ்சலி :
கருணாநிதி : திரையுலகம் உள்ளவரை பாலசந்தரின் புகழ் மேலும், மேலும் வளரும். புதிய திருப்பங்கள் பலவற்றை கலைத்துறையில் ஏற்படுத்தியவர் அவர்.
தலைவர்கள், நடிகர்கள்அஞ்சலி :
கருணாநிதி : திரையுலகம் உள்ளவரை பாலசந்தரின் புகழ் மேலும், மேலும் வளரும். புதிய திருப்பங்கள் பலவற்றை கலைத்துறையில் ஏற்படுத்தியவர் அவர்.
ஜெயலலிதா: அன்பும், அடக்கமும் கொண்ட எளிய மனிதர் கே.பாலச்சந்தர். கலை உலக வாழ்கையை திண்ணை நாடகங்கள் மூலம் துவக்கியவர். எண்ணற்ற தேசிய, மாநில விருதுகளை பெற்றவர். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்துள்ள பங்கு ஈடு செய்ய முடியாது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் விட்டுச் சென்றுள்ள இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
விஜயகாந்த்: இயக்குனர் கே.பாலச்சந்தர் கலையுலகிற்கு உணர்வோடு ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூறத்தக்கது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
சந்திரபாபு நாயுடு (ஆந்திர முதல்வர்): பாலச்சந்தர் இயக்கிய மரோ சரித்ரா தெலுங்கின் சிறந்த படங்களில் ஒன்று. எங்கள் விசாகபட்டினம் அவருக்கு பிடித்த நகரம். அவரது கனவு நகரம். அந்த நகரம் புதுப்பொலிவு பெறுவதை பார்க்காமலேயே அவர் சென்று விட்டது மிகுந்த வருத்தத்தை தருகிறது.
சந்திரசேகர்ராவ் (தெலுங்கானா முதல்வர்): தென்னிந்திய படங்களில் உயர்ந்த தரத்தை கொண்டு வந்தவர் கே.பாலச்சந்தர். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவுக்கும் பெரிய இழப்பு.
ஜி.கே.வாசன் (த.மா.கா.தலைவர்): கே.பாலச்சந்தரின் புகழ் தமிழ் சினிமாவில் நேற்று, இன்று, நாளை வரலாறாக நிற்கும். எளிமைக்கும், பண்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். எங்கள் குடும்பத்தோடு 40 ஆண்டுகள் நெருக்கமாக இருந்தவர்.
ப.சிதம்பரம் : ஆழ்ந்த அனுதாபங்கள். நான் அவருடைய ரசிகன். 1970,80களில் அவரது படத்தை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. பார்த்து ரசிகராக மாறாதவர்கள் இல்லை. திரைத்துறையிலும், நாடகத்துறையிலும் ஜாம்பவனாக இருந்தவர். அவரின் படங்களில் முத்திரை பதித்தார் என்பதை மறுக்க முடியாது. திரையுலகினர் பலர் அவரை குருவாக ஏற்றுக் கொண்டனர். பல நடிகர், நடிகைகளை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர். சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர்.
ஸ்டாலின் : பாலசந்தரின் மறைவு திரைதுறைக்கு பேரழிப்பு. திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் பாலச்சந்தர். ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களை உருவாக்கிய மாபெரும் சகாப்தம், பாலசந்தர். கருணாநிதி மீது அளவுகடந்த பற்றும் பாசமும் கொண்டவர். திரைதுறை மட்டுமின்றி சமூக பணியிலும் அதிக அக்கறை கொண்டவர். நான் மேயராக இருந்த போது அதிகளவில் ஊக்கமளித்தவர் அவர்.
ரஜினிகாந்த்: இயக்குனரின் மறைவு திரையுலகிற்கு பெரிய இழப்பு, அவர் எனக்கு குரு மட்டுமல்ல அப்பா மாதிரி. அப்படித்தான் என்னை கடைசிவரை பார்த்தார். ஒரு நடிகனாக எப்போதும் என்னை பார்த்ததில்லை. என் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்தார். அவரை இழந்தது என்னை நானே இழந்த மாதிரி உணர்கிறேன். இன்னொரு கே.பி.சாரை திரையுலகில் பார்க்கவே முடியாது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
No comments:
Post a Comment