சென்னையில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மாணவர்கள் கைது
சென்னை: சென்னையில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட யூசூப் உட்பட 3 பெரும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பிரிட்டோ லாரன்ஸ், சையது அப்துல் காதற் ஆகியோர் கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவர்கள் ஆவர். நேற்றிரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பெண்ணிடம் செயின் பறித்தது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலீசிடம் சிக்கிய மூவரும் சென்னை மதுரவாயலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த பிரிட்டோ லாரன்ஸ் தலைமையில் மூவரும் வழிப்பறி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வழிப்பறிக்கு 150 சிசி இரு சக்கர வாகனத்தை மாணவர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கலூரி விட்டு மாலை வேளையில் பைக்கில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் 100 சவரன் வரை பல்வேறு இடங்களில் வழிப்பறி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான அப்துல் காதற் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மற்றும் யூசுப் மதுரையைச் சேர்ந்தவர் ஆவர்.
"கார்த்திக் விக்கி"
தங்களின் வருகைக்கு நன்றி
No comments:
Post a Comment