நாளை(மே 15) முதல் ஏர்-இந்தியாவின் ட்ரீம்லைனர் விமான சேவை துவங்குகிறது
புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனத்தின் ட்ரீம்லைனர்
விமான சேவைகள் நாளை(மே15ம் தேதி) முதல் துவங்குகிறது. அமெரிக்காவின் போயிங்
விமானத்தால் உருவாக்கப்பட்ட ட்ரீம்லைனர் விமானங்களை இந்திய உள்ளிட்ட பல
நாடுகளும் வாங்கியுள்ளன. இந்த விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில்
ஜப்பான் நாட்டில் வாங்கப்பட்ட ட்ரீம்லைனர் விமானத்தின் பேட்டரியில் ஏற்பட்ட
தீயால் அனைத்து நாடுகளும் ட்ரீம்லைனர் விமான சேவையை நிறுத்தியது.
இந்தியாவும் ட்ரீம்லைனர் விமான சேவையை நிறுத்தியது. இந்நிலையில்
அதன்கோளாறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு மீண்டும் ட்ரீம்லைனர்
விமானங்களின் சேவை பிறநாடுகளில் துவங்கியுள்ளது.
இந்நிலையில்
இந்தியாவும் மீண்டும் தனது ட்ரீம்லைனர் விமான சேவையை துவக்குகிறது. நாளை
முதல் உள்நாட்டிலும், மே 22ம் தேதி முதல் உலக அளவிலும் இதன் சேவை
துவங்குவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங்
கூறியுள்ளார். மேலும் நடப்பு ஆண்டில் ஏர்இந்தியா நிறுவனத்துக்கு சுமார்
ரூ.2000 கோடி செலவு குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment