பயங்கரவாதிகளால் எனது உயிருக்கு ஆபத்து: அலறுகிறார் சஞ்சய் தத்
மும்பை: மும்பை வெடிகுண்டு சம்பவ வழக்கில் சரணடைய கூடுதல் அவகாசம் கோரிய சஞ்சய்தத் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் பயங்கரவாதிகளால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார். 1993-ம் ஆண்டு மும்பையில்நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் 257 பேர் பலியாயினர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஏ.கே.56 ரக துப்பாக்கி வைத்திருந்ததாக பாலிவுட்நடிகர் சஞ்சய்தத்(53) கைது செய்யப்பட்டார். தடா கோர்ட்டில் நடந்த வழக்கில் அவருக்கு 2006-ம் ஆண்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் சுப்ரீம் கோர்ட் மூலம் ஜாமின் பெற்றிருந்தார். தனது தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் நடந்த அப்பீல் மனுவில் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்ததால், மீதமுள்ள மூன்றரை (42 மாதங்கள் ) ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கோர்டில் சரணடைய உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சரணடைய கூடுதல் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதன் காலக்கெடு வரும் 16-ம் தேதியுடன் நிறைவடைகிறது.இந்த சூழ்நிலையில் கூடுதலாக கால அவகாசம் தர வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் திரைப்பட பாலிவுட் தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஏ.சினாப், சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவி்ட்டார். இந்நிலையில் நடிகர் சஞ்சய்தத் , மும்பை அடுத்த புனே நகரில் உள்ள ஏர்வாடா சிறையில் நேடியாக சரணடைய திட்டமிட்டுள்ளார். அவர் கூறுகையில், சில பயங்கரவாத அமைப்புகளால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு்ள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment