Search This Blog

Tuesday, 14 May 2013

குடும்ப உறுப்பினர்களை உதவியாளர்களாக வைத்திருக்கும் எம்.பி., க்கள் : அரசு சார்பில் சம்பளம்

குடும்ப உறுப்பினர்களை உதவியாளர்களாக வைத்திருக்கும் எம்.பி., க்கள் : அரசு சார்பில் சம்பளம்

புதுடில்லி : பெரும்பாலான எம்.பி.,க்கள் தங்களின் மகன்கள், மகள்கள், மனைவிகள், சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் பிற உறவினர்களை மட்டுமே தங்களின் உதவியாளர்களாக (பி.ஏ.,) வைத்துள்ளனர். இவர்களுக்கு பார்லிமென்ட் சார்பில் மாதாமாதம் சம்பளம் வழங்கப்படுகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளி விபர அறிக்கையின்படி லோக்சபாவின் 104 எம்.பி.,க்கள் மற்றும் ராஜ்யசபாவின் 42 எம்.பி.,க்கள் என மொத்தம் 146 எம்.பி.,க்கள் தங்களின் உதவியாளர்களாக உறவினர்கள் 191 பேரை நியமித்துள்ளனர். சம்பளம் மற்றும் அகவிலைப்படி விதிகளின்படி லோக்சபா மற்றும் ராஜ்யசபா செயலாளர்கள், எம்.பி.,க்களின் உதவியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 வழங்குகின்றனர். இந்த சம்பளம் எம்.பி., வைத்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களை உதவியாளர்களாக வைத்திருப்பது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, அவ்வாறு வைத்துக் கொள்ளக் கூடாது என் எந்த சட்டமும் இல்லை என மூத்த எம்.பி.,க்கள் பதிலளித்துள்ளனர். எம்.பி.,க்களின் 60 மகன்கள், 36 மனைவிகள், 27 மகள்கள், 7 சகோதரர்கள், 7 மருமகள்கள், 4 கணவர்கள் மற்றும் 10 உறவினர்கள் உள்ளிட்டோரை உதவியாளர்களாக கொண்டுள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்ட அடிப்படையிலான அறிக்கையில் கட்சி வாரியாகவும் எம்.பி.,க்களின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது. உறவினர்களை உதவியாளர்களாக வைத்திருக்கும் எம்.பி.,க்கள் 146 பேரில் பா.ஜ., 38, காங்கிரஸ் 36, பகுஜன் சமாஜ் கட்சி 15, சமாஜ்வாதி 12, திமுக 8, பிஜூ ஜனதா தளம் 7, ஐக்கிய ஜனதா தளம் 6 என ப்டடியலிடப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள 146 எம்.பி.க்களில் 36 பேர் ஒன்றிற்கும் மேற்பட்ட உறவினர்களை உதவியாளர்களாக கொண்டுள்ளனர். சிலர் குடும்ப உறுப்பினரை ஒரு உதவியாளராகவும், வேறு ஒருவரை மற்றொரு உதவியாளராகவும் வைத்துள்ளனர். முதல் உதவியாளருக்கு ரூ.30,000 மும், மற்ற உதவியாளருக்கும் அதை விட குறைவாகவும் சம்பளம் வழங்கப்படுகிறது.

மூத்த எம்.பி.,க்கள் சிலர் தங்களின் பேரன், பேத்திகளை கூட தங்களின் உதவியாளர்களாக நியமித்துள்ளனர். லோக்சபா உறுப்பினர்கள் 202 பேரை உதவியாளர்களாகவும், ராஜ்யசபா உறுப்பினர்கள் 49 பேரை உதவியாளர்களாகவும் கொண்டுள்ளனர். இந்த உதவியாளர்களில் சிலருக்கு மாத சம்பளமாக ரூ.2000 மட்டுமே வழங்கப்படுகிறது. டில்லியில் பயிற்சி ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ.8000 க்கு மேல் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஜம்முவின் காங்கிரஸ் எம்.பி., மண்டன்லால் சர்மா தனது மனைவி மற்றும் மகனை உதவியாளராக வைத்துள்ளார். அது குறித்து அவர் கூறிய போது, தான் விதிமுறைகள் எதையும் மீறவில்லை எனவும், தனது மகன் சட்டம் படித்தவர் எனவும் அவர் லண்டன் சென்று திரும்பியவர் எனவும், அதனால் அவரக்கு பல விபரங்கள் தெரியும் என்பதால் அவரை தான் உதவியாளராக வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பார்லிமென்ட் குழு உறுப்பினர்களின் தர்மத்தை மீறுவதாக எம்.பி.,க்களின் இந்த செயல் உள்ளதாகவும், இது இரு அவைகளிலும் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் லோக்சபா முன்னாள் செயலாளர் சுபாஷ் காசியாப் தெரிவித்துள்ளார். பார்லிமென்ட் விதிமுறை குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் சிலரும் தங்களின் உதவியாளர்களாக உறவினர்களை வைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

No comments:

Post a Comment