ஊட்டி மலர் கண்காட்சி நிறைவு
2 லட்சம் பேர் கண்டுகளிப்பு
கண்காட்சியில் இடம்பெற்ற ஏராளமான மலர் அலங்காரங்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்தன. 3 நாள் கண்காட்சியை 2 லட்சம் சுற்றுலா பயணிகள் ரசித்துள்ளனர். நிறைவு நாளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சிறந்த மலர் அலங்காரம் மற்றும் தோட்டங்களுக்கு தோட்டக்கலை துறை ஆணையர் சத்யபிரத சாகு, வேளாண் உற்பத்தி ஆணையர் சந்தீப் சக்சேனா ஆகியோர் பரிசு வழங்கினர். ‘கார்டன் ஆப் தி இயர்’ கவர்னர் சுழற்கோப்பையை ஊட்டி நார்த்லேக் ரோடு, கோல்கொண்டா ஹவுஸ்கானும், ‘புளூம் ஆப் த ஷோ’ முதல்வர் தங்க சுழற்கோப்பையை வெலிங்டன் ராணுவ மையமும் பெற்றன. நிறைவு விழாவுக்கு கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்கினார்.
மலர் கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள் நேற்று மாலை முதல் சொந்த ஊர் திரும்ப துவங்கினர். இதனால், ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டதால் அங்கும் வாகன நெரிசல் ஏற்பட்டது. பஸ்களில் கூட்டம் அலைமோதியது. கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூர் சிம்ஸ் பார்க்கில் 55வது பழ கண்காட்சி வரும் 25, 26ம் தேதிகளில் நடக்கிறது
No comments:
Post a Comment