Search This Blog

Tuesday, 28 May 2013

நிறுவனங்கள் வெளியிட்ட கடன்பத்திரங்களில் பரஸ்பர நிதியங்கள் ரூ.2 லட்சம் கோடி முதலீடு

நிறுவனங்கள் வெளியிட்ட கடன்பத்திரங்களில் பரஸ்பர நிதியங்கள் ரூ.2 லட்சம் கோடி முதலீடு

         மும்பை:நடப்பு 2013ம் ஆண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடன்பத்திரங்களில், இதுவரையிலுமாக, 2.04 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. அதேசமயம், கடந்த 2012ம் ஆண்டில், இந்நிறுவனங்களின் கடன்பத்திர முதலீடு, 4.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
நிதி சந்தைகள்:பரஸ்பர நிதி நிறுவனங்கள், அவற்றின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக, முதலீட்டாளர்களிடமிருந்து, நிதி திரட்டி, நிறுவனங்களின் பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் நிதி சந்தைகளில் முதலீடு செய்கின்றன.இவ்வகையில், நடப்பாண்டில், இதுவரையிலுமாக, பரஸ்பர நிதி நிறுவனங்கள், நிகர அளவில், 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன.
பங்குகள்:கடந்த 2012ம் ஆண்டில், இந்நிறுவனங்கள், நிகர அளவில், 20,653 கோடி ரூபாய் மதிப்பிற்கான பங்குகளை விற்பனை செய்து உள்ளன.பரஸ்பர நிதி நிறுவனங்கள், அதிகளவில், பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பாண்டில், இது வரையிலுமாக, 79,554 கோடி ரூபாய் மதிப்பிற்கு, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' வெளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், 5,212 கோடி ரூபாய் மதிப்பிற்கு, நிறுவனப் பங்குகளை விற்பனை செய்திருந்தன. இது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில், முறையே, 848 கோடி மற்றும் 1,614 கோடி ரூபாயாக இருந்தது.இது, ஏப்ரல் மாதத்தில், 539 கோடி ரூபாயாகவும், மே மாதத்தில், இதுவரையில், 2,708 கோடி ரூபாயாகவும் உள்ளது.மார்ச் இறுதிவரையிலுமாக, பரஸ்பர நிதி நிறுவனங்கள், 1,294 திட்டங்களை கொண்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
சொத்து மதிப்பு:கணக்கீட்டு காலத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் பங்கு சார்ந்த வகையில் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 1.79 லட்சம் கோடியாகவும், கடன் சார்ந்த வகையில் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 4.90 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது என, "செபி' அமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment