Search This Blog

Tuesday, 28 May 2013

தங்க நாணயம் மீது கடன் ; ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு

தங்க நாணயம் மீது கடன் ; ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு

       மும்பை: வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி அமைப்புகளுக்கு, ரிசர்வ் வங்கி நேற்று பிறப்பித்துள்ள உத்தரவு: தனிப்பட்ட நபருக்கு, தங்க நகைகள், தங்க நாணயங்கள் மீது வழங்கப்படும் கடன்கள், 50 கிராம் அளவுக்குள் மட்டுமே வழங்க வேண்டும்.அதற்கு மேல் வழங்கக்கூடாது. தங்க நாணயங்கள் மட்டுமின்றி, தங்க பத்திரங்கள், பரஸ்பர நிதியங்களில், தங்க முதலீட்டுத் திட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையிலும், கடன் வழங்கக் கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க நாணயம், தங்க நகைகள் வாங்க, வாடிக்கையாளர்களுக்கு கடன் தரக் கூடாது என, மத்திய அரசு, வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment