சிவகாசி: பட்டாசு ஆலையில் விபத்து: 3 பேர் பலி: ஒன்றரை வயது குழந்தை உட்பட 18 பேர் சிகிச்சைக்கு அனுமதி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி
அருகே கிச்சன்நாயக்கன் பட்டியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் பென்சில் ரக
பட்டாசுகளில் முனையில் மருந்து வைக்கும்போது உராய்வு ஏற்பட்டதால் இந்த
விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணையில் இதுதான் காரணம்
என்று தெரிவிக்கின்றனர்.
விபத்து ஏற்பட்டவுடன் அனைத்து அறைகளுக்கும் தீ பரவியதால் பட்டாசுகள் வெடித்த வண்ணம் இருந்தன. இதனால் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க கடும் போராட்டம் நடத்தினர். ஆலையின் உரிமையாளர் கருப்பையா தலைமறைவானார்.
விபத்து ஏற்பட்டவுடன் அனைத்து அறைகளுக்கும் தீ பரவியதால் பட்டாசுகள் வெடித்த வண்ணம் இருந்தன. இதனால் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க கடும் போராட்டம் நடத்தினர். ஆலையின் உரிமையாளர் கருப்பையா தலைமறைவானார்.
இந்த
விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது.
ஒன்றரை
வயது குழந்தை உட்பட 18 பேர் இந்த விபத்தில் காயமடைந்து சிவகாசி
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின்
நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று
அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் விளாம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்றும், மற்றொருவர் பெண் என்பதும் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment