ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து வன்முறையில் 5 பஸ்கள் எரிப்பு
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நடந்த வன்முறையில் 5 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 200 வாகனங்கள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வடமாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இரவில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து வடமாவட்டங்களில் பல இடங்களில் கலவரம் வெடித்தது.காஞ்சிபுரம் அருகே உள்ள தாமலில் தாம்பரத்தில் இருந்து வேலூர் சென்ற அரசு பஸ்சை நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு 15 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பஸ்சில் பயணம் செய்த 37 பேரையும் கீழே இறக்கிய பிறகு, பஸ்சை அந்த கும்பல் தீ வைத்து எரித்தது.காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் என்ற இடத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி சென்ற ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான பஸ்சை நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பயணிகளை இறக்கிவிட்டு, பஸ்சுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.காஞ்சிபுரம் அருகே உள்ள வதியூர் என்ற இடத்தில் கீழ்வெண்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற டவுன் பஸ்சை 10 பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு 7 மணிக்கு வழிமறித்தது. பின் பயணிகளை இறக்கி விட்டு, பஸ் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதில் பஸ் தீ பிடித்து முழுமையாக எரிந்தது. பின் அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.அதேபோல, கிழக்கு கடற்கரை சாலையில் 15க்கும் மேற்பட்ட பஸ் மற்றும் வாகனங்கள் நொறுக்கப்பட்டன. திருக்கழுக்குன்றம் அருகே கருமாரப் பாக்கம் என்ற இடத்தில் பனைமரங்களை வெட்டி போக்குவரத்தை பாமகவினர் முடக்கினர். திருவள்ளூர் மாவட்டத்திலும் 5க்கும் மேற்பட்ட பஸ்கள் உடைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் மறியல் நடந்தது. ஆத்தூரில் நேற்று அதிகாலை ஈரோட்டிலிருந்து சென்னை சென்ற அரசு பஸ் மீது கொத்தாம்பாடியில், மர்ம கும்பல் சரமாரியாக கல் வீசி தாக்கியது. இதேபோல் மறுமார்க்கத்தில் வந்த இரு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இடைப்பாடி அருகே 2 தனியார் பஸ் உட்பட 3 பஸ்கள் தாக்குதலுக்குள்ளாகின.சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் சாலை மறியல் செய்து கைது செய்யப்பட்ட பாமகவினரை அடைக்க சேலம் சிறையில் இடம் இல்லாததால் வெளியே நிறுத்தப்பட்டனர். இதை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 535 பாமகவினர் நேற்று காலை உணவை சாப்பிட மறுத்துவிட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்தியதையடுத்து உணவு அருந்தினர்.திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நேற்று 8 இடங்களில் பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சேத்துப்பட்டு அருகே 3 இடங்களில் மரங்களை வெட்டி சாலையில் போட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது. பல இடங்களில் மரங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை 32 பஸ் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. 10 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்துள்ளது. அரக் கோணத்தில் 5 பஸ்கள் நொறுக்கப்பட்டன.விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகளுக்கு தீ வைப்பு சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது. புதுச்சேரி சாலையில் ஆங்காங்கே மறியல் நடந்தது.புதுவையில் பல்வேறு இடங்களில் மறியல் நடந்தது. 10க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டன.
கடைகள் அடைக்கப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கடலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் மறியல் நடந்தது. மொத்தம் 2 பெண்கள் உள்பட 297 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.நாகை மாவட்டத்தில் சாலை மறியல், கடையடைப்பு போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன. மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் 7 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நேற்று முன்தினம் இரவு 2 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. மரங்களை வெட்டி மறியலில் ஈடுபட்டனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 12 பாமகவினர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மறியலில் ஈடுபட்ட வன்னியர் சங்கத்தினர் 55 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பஸ் நிலையத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம ஆசாமிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் கச்சிராபாளையத்தில் 2 டாஸ்மாக் கடைகள், ஒரு நூலகத்தின் மீது மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதில் பல ஆயிரம் மதிப்பு
"தங்களின் வருகைக்கு நன்றி"
No comments:
Post a Comment