இந்தியாவின் எச்சரிக்கைகையும் மீறி
ஊடுருவிய பகுதியில் ராணுவத்தை குவிக்கும் சீனா :
எல்லையில் பதற்றம் நீடிப்பு
லடாக்: இந்தியாவின் எச்சரிக்கைகையும் மீறி ஊடுருவிய பகுதியில் சீனா தனது ராணுவத்தினரை குவித்து வருவதால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள தவ்லத் பார்க் ஆல்டியில் 19 கிலோ மீட்டர் வரை ஊடுருவியுல்ல சீன ராணுவத்தைச் சேர்ந்த 40 வீரர்கள் 5 கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர். பிரச்சனைக்கு தீர்வு காண இரு நாடுகளைச் சேர்ந்த பிரேகிடியர்கள் மட்டத்திலான 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
ஊடுருவிய பகுதியில் சீன ராணுவத்தினர் இது எங்கள் பகுதி என்று பேனர்களை வைத்துள்ளனர். இதனையடுத்து ஆளில்லா
விமானம் மூலம் கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. எனினும் தொடர்ந்து வீரர்களை அதிகரித்து வரும் சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறுவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. மாறாக சீன படையினருக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்கள் எல்லைக்கு அப்பாலில் இருந்து வந்த வண்ணம் உள்ளன. இதனிடையே சீன ஊடுருவல் பிரச்சனையில் குழப்பமான மற்றும் முரண்பட்ட நிலை அரசிடம் காணப்படுவதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். பிரச்சனை தீவிரமடைற்து வரும் நிலையில் இந்திய ராணுவ தளபதி விக்ரம் சிங், பிரதமமரை சந்தித்து எல்லையில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து விளக்கினார். பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இந்த பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
"தங்களின் வருகைக்கு நன்றி"
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்
No comments:
Post a Comment