Search This Blog

Friday, 31 May 2013

பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 காசுகள் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 காசுகள் உயர்வு

புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு, 75 காசும், டீசல் விலை லிட்டருக்கு, 50 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில், இந்த விலை உயர்வு, பெட்ரோலுக்கு, 95 காசுகளாகவும், டீசலுக்கு, 61 காசுகளாகவும் இருக்கும். உள்ளூர் வரிகள் மற்றும் வாட் வரிகள் சேர்த்து, சென்னையில் இனி, பெட்ரோல் விலை, 66.85 (தற்போதைய விலை 65.90) ரூபாயாக இருக்கும்; டீசல் விலை, 53.53 (தற்போதைய விலை 52.92) ரூபாயாக இருக்கும். அதேநேரத்தில், மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை, 14.2 கிலோ எடை கொண்ட, சிலிண்டர் ஒன்றுக்கு, 45 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மானிய விலையில், ஆண்டு ஒன்றுக்கு, ஒன்பது சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. அதற்கு மேல், அதிக விலை கொடுத்து, கூடுதலாக சிலிண்டர்கள் வாங்குவோருக்கு, இந்த விலை குறைப்பு அமலாகும்.

No comments:

Post a Comment