Search This Blog

Friday, 31 May 2013

இன்று காவிரி தற்காலிக மேற்பார்வை குழு கூட்டம் பங்கேற்க தமிழக தலைமை செயலர் டில்லி பயணம

இன்று காவிரி தற்காலிக மேற்பார்வை குழு கூட்டம் பங்கேற்க தமிழக தலைமை செயலர் டில்லி பயணம

சென்னை:காவிரி நீர் பிரச்னை தொடர்பாக, டில்லியில் இன்று நடைபெற உள்ள, தற்காலிக மேற்பார்வை குழுவின், முதல் கூட்டத்தில், தமிழக தலைமைச் செயலர் பங்கேற்கிறார்.

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி அமைக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம், பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வில்லை. எனினும்,சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி, தற்காலிக ஏற்பாடாக, மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது.

இதில், காவிரி நீரை பங்கிட்டுக் கொள்ளும், தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி, ஆகிய, நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், மத்திய நீர் வள கமிஷன் தலைவர் ஆகியோர், உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய நீர் வள கமிஷனின் தலைமைப் பொறியாளர், உறுப்பினர் செயலாக உள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை, இக்குழு, தற்காலிகமாக செயல்படும். நிர்ணயிக்கப்பட்ட, டி.எம்.சி., அளவு தண்ணீர், நான்கு மாநிலங்களுக்கும், பகிர்ந்தளிக்கப்படுகிறதா என்பதை, இக்குழு கண்காணிக்கும்.

முதல் கூட்டம்:நதி நீர் பங்கீட்டில் சிரமம் இருப்பதாக, குழுத் தலைவர் அல்லது உறுப்பினர்களில் யாராவது புகார் கூறினால், அதை குழு, உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும். இக்குழுவின் முதல் கூட்டம், இன்று டில்லியில் நடைபெறுகிறது.இக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நேற்று டில்லி புறப்பட்டு சென்றனர். கூட்டத்தில், தலைமைச் செயலர் கலந்து கொண்டு, குறுவை சாகுபடிக்கு, காவிரி நீர் வழங்க வேண்டிய அவசியம் குறித்து, வலியுறுத்த உள்ளார்.

No comments:

Post a Comment