பாகிஸ்தானில் கொல்லப்பட்ட
சரப்ஜித் சிங் உடல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
லாகூர்: பாகிஸ்தானில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த இந்தியரான சரப்ஜித் சிங்கின் உடல் இந்திய
அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. லாகூரில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் உடலை ஒப்படைத்தனர். தனி விமானத்தில் அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட உள்ளது. சரப்ஜித் சிங்கை தாக்கியோர் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று பாகிஸ்தான் உறுதி கூறியுள்ளது. லாகூரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சரத்தை சந்தித்த பஞ்சாப் மாகாண முதல்வர் இந்த உறுதியை அவரிடம் கூறியுள்ளார்.
"தங்களின் வருகைக்கு நன்றி"
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்
No comments:
Post a Comment