சூதாட்டத்தை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் கபில் சிபல்
புதுடில்லி: சூதாட்டத்தை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது
என கூறிய மத்திய அமைச்சர் கபில் சிபல், சூதாட்டத்தை ஒழிக்க கொண்டு
வரப்படும் புதிய சட்டம், கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமல்லாமல், அனைத்து
விளையாட்டுகளுக்கும் பொதுவானதாக இருக்கும் என கூறினார்.
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா மற்றும் சவான் உள்ளிட்டோர் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும் சில புக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் பலர் கைது செய்யப்படுகின்றனர். ரமேஷ் வியாஸ் என்ற புக்கி அளித்த தகவலின் பேரில், பாலிவுட் நடிகர் வின்டூ கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு வைத்திருந்த காரணத்திற்காக சென்னை அணியின் நிர்வாகியும், பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இவ்வாறு சூதாட்டம் தொடர்பாக பலர் கைது செய்யப்படுவதை தொடர்ந்து, சூதாட்டத்தை ஒழிக்க தேசிய அளவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக அட்டர்னி ஜெனரலுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று சூதாட்டத்திற்கு எதிரான புதிய சட்டம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் கபில் சிபல் , கடந்த 10 வருடங்களாக கிரிக்கெட் மட்டுமல்லாமல் மற்ற விளையாட்டு போட்டிகளிலும் முறைகேடு நடக்காமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சூதாட்டத்திற்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வர முடியுமா என யாரும் கேள்வி எழுப்ப முடியாது. சூதாட்டத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் சட்டம் பற்றி அட்டர்னி ஜெனரலுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அவர் சட்ட அமைச்சகத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டார். மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவது, பெட்டிங் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றில் வராது என அட்டர்னிஜெனரல் கருத்து தெரிவித்துள்ளார் . சூதாட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இந்த சட்டத்தில் கார்பரேட் ஊழியர்கள், புக்கிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு தண்டனை வழங்க வழிவகுக்கப்படும்.
இந்த சட்டம் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமல்லாமல், அனைத்து போட்டிகளுக்கும் பொதுவாக கொண்டு வரப்படும். சூதாட்டம் காரணமாக, விளையாட்டு மீது நம்பிக்கை வைத்திருக்கும், பல லட்ச கணக்கான ரசிகர்களின் நம்பிக்கையை விழ விட மாட்டோம். சூதாட்டத்திற்கு எதிரான மசோதா வெளிப்படையான மசோதாவாக இருக்கும். சூதாட்டத்திற்கு எதிரான மசோதாவை விரைவில் கொண்டு வர அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த மசோதா பற்றி ராஜீவ் சுக்லா, அருண்ஜெட்லி ஆகியோருடன் ஆலோசனை செய்யப்பட்டது. சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதை அனைவரும் ஒத்துக்கொண்டனர்.
சட்டம் தொடர்பாக தனது கருத்தை 2 நாட்களில் தெரிவிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சகம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. சூதாட்டத்திற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆராய வேண்டியுள்ளது. சூதாட்டத்திற்கு என சட்டதிருத்தம் கொண்டுவராமல், புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது எனது எண்ணம். போட்டியை மாற்றும் வகையில் நடக்கும் முறைகேடான நடவடிக்கை எவை என்பது பற்றி புதிய மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும். சூதாட்டம் தொடர்பான வரைவு மசோதா மூன்று அல்லது நான்கு நாட்களில் தயாராகிவிடும் என கூறினார்.

No comments:
Post a Comment