Search This Blog

Monday, 6 May 2013

மத்திய அரசுக்கு சிக்கல் நிலக்கரி ஊழல் : புதிய பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ

மத்திய அரசுக்கு சிக்கல்
நிலக்கரி ஊழல் : புதிய பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. பிரதமர் அலுவலகம், சட்ட அமைச்சருடன் ஆலோசித்து வரைவு அறிக்கையில் திருத்தம் செய்ததாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த 9 பக்க பிராமணப் பத்திரத்தில் சிபிஐ விளக்கம் அளித்துள்ளது. அரசு தலைமை வழக்கறிஞரும் வரைவு அறிக்கையை பார்த்து திருத்தம் செய்தார் என சிபிஐ விளக்கம் அளித்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்த இந்த பிரமாணப் பத்திரத்தால் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தங்களின் வருகைக்கு நன்றி

உங்கள் கருத்துகளை பதிவு செய்க

No comments:

Post a Comment