விமான பணிப்பெண் கீதிகா தற்கொலை வழக்கு கண்டா மீதான விசாரணை தள்ளி வைப்பு
புதுடெல்லி: விமான பணிப்பெண் கீதிக தற்கொலை வழக்கில் கைதான அரியானா மாநில முன்னாள் அமைச்சர் கண்டாவின் மீதான விசாரணை 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அரியானாவில் அமைச்சராக இருந்தவர் கோபால் கண்டா. அவருக்கு எம்டிஎல்ஆர் விமான போக்குவரத்து நிறுவனம் உள்ளது. வெளிநாட்டிற்கு விமானத்தில் சென்றபோது அதில் பணிப்பெண்ணாக இருந்த கீதிகாவின் அழகில் கண்டா மயங்கினார். அவரை தனது விமான நிறுவனத்தில் சேர்த்து கொள்ள கண்டா விரும்பினார். அதற்காக கண்டா சார்பில் அவரது பெண் உதவியாளர் அருணாவை கீதிகாவிடம் தூது அனுப்பினார்.அவருக்கு கண்டாவின் விமான கம்பெனியில் உயர்ந்த பதவி கொடுக்க சம்மதித்த அருணா, கீதிகாவை கண்டாவிடம் அழைத்து வந்தார். ஏற்கனவே உறுதியளித்தபடி கீதிகாவுக்கு உயர் பதவி வழங்கப்பட்டதுடன், தினமும் கண்டாவை சந்தித்து அலுவலக விவகாரம் பற்றி பேச வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதைத்தொ டர்ந்து கடந்த ஆண்டு கண்டாவின் விமாக கம்பெனியில் கீதிகா வேலைக்கு சேர்ந் தார். வடமேற்கு டெல்லி அசோக் விகாரில் கீதிகா தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி தனது வீட்டில் கீதிகா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறித்து அவர் எழுதியிருந்த கடிதத்தில், தனக்கு கோபால் கண்டாவும் அருணாவும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொ டுத்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தார். இதையடுத்து, கோபால் கண்டாவிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் முடிவு செய்தனர். இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் வேறு வழியில்லாமல் அமைச்சர் பதவியை கண்டா ராஜினாமா செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். இதற்கிடையில், தற்கொலைக்கு காரணமான கண்டாவின் உதவியாளர் அருணாவை போலீ சார் கைது செய்தனர்.
குர்கானில் உள்ள கோபால் கண்டாவின் எம்டிஎல்ஆர் அலுவலகத்தில் டெல்லி போலீசார் சோதனை நடத்தினர். பெண் போலீசார் உட்பட 14 பேர் கொண்ட போலீஸ் குழுவினர், 4 மாடி கட்டிடத்தில் 2 மணி நேரத்துக்கு மேல் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதை தொடர்ந்து தப்பிக்க வழியில்லாமல் போலீசில் கண்டா சரண் அடைந்தார். அதைத்தொ டர்ந்து அவரை போலீசார் கைது செய்து திகார் சிறை யில் காவலில் வைத்தனர். அவர் மீது கீதிகாவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது, மன உளைச்சலுக்கு காரணமானது மற்றும் கீதிகாவை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்லனர்.இந்த நிலையில் கீதிகாவின் தாயாரும் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்திலும் தனது தற்கொலைக்கு கண்டாதான் காரணம் என்று கூறப்பட்டு இருந்தது.இதற்கிடையே தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி நீதிமன்றத்தில் பலமுறை கண்டாவும் அருணாவும் மனு செய்தனர். இந்த நிலையில் அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு டெல்லி மாவட்ட மற்றும் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், கண்டா மற்றும் அருணா மீதான குற்றங்களை நிரூபிக்க தங்களிடம் போதுமான ஆதாரம் இருப்பதாக கூறினார்கள். அதேபோல அரசு வழக்கறிஞரும் கண்டா மற்ரும் அருணா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுபற்றிய முடிவை 10ம் தேதி அறிவிப்பதாகக் கூறி வழக்கை 10 ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தங்களின் வருகைக்கு நன்றி
உங்கள் கருத்துகளை பதிவு செய்க
No comments:
Post a Comment