வெப்கேமரா மூலம் கணவனுடன் சண்டையிட்ட மனைவி திடீர் தற்கொலை
மும்பையில் இன்று 27 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை வெப்கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருந்த அவரது காதல் கணவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
“இந்த தம்பதியர் இருவரும் சமீபத்தில் கோர்ட்டில் ரகசிய திருமணம் செய்துகொண்டனர். ஆனால், திருமணத்திற்குப் பின்னர் அந்தப் பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று அந்தப் பெண் தன் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வெப்கேமரா முன் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்தபடி கடுமையாக சண்டையிட்டனர். அப்போது ஆத்திரமடைந்த அந்தப் பெண் திடீரென தூக்குப்போட்டு இறந்துள்ளார். இதை அவரது கணவர் பார்த்துள்ளார்” என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததால் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டதாக, அவரது பெற்றோர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஜுகு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பெண்ணின் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment