4 ஆண்டில் முதல் முறையாக தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்தது
பெங்களூர் : எச்எஸ்பிசியின் உற்பத்தி, விற்பனை மேலாண்மை புள்ளி ஆய்வில் தெரியவந்துள்ளதாவது: கடந்த மே மாதத்தில் தொழிற்சாலை உற்பத்தி பெருமளவில் குறைந்துள்ளது. 4 ஆண்டுகளில் இந்த அளவுக்கு குறைந்துள்ளது இதுவே முதல் முறை. கடந்த 2009ம் ஆண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி புள்ளி 50க்கு கீழ் இருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 51.0 புள்ளியாக இருந்த உற்பத்தி, மே மாதத்தில் 50.1 ஆக குறைந்தது. உள்நாட்டில் தேவை குறைவாக இருப்பதாலேயே, தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருமளவில் குறைந்துள்ளது.
No comments:
Post a Comment