Search This Blog

Tuesday, 4 June 2013

மும்பை தாதாக்களுடன் தொடர்பு : ஸ்ரீசாந்த் இனி தப்பிக்கவே முடியாது

மும்பை தாதாக்களுடன் தொடர்பு : ஸ்ரீசாந்த் இனி தப்பிக்கவே முடியாது


 
மும்பை: கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி சிறையில் இருக்கும் ஸ்ரீசாந்த் மற்றும் அஜீத்சாண்டில்லா, அங்கீத்சவான்(திருமணத்திற்காக ஜாமின் பெற்றவர்) ஆகியோருக்கு மும்பை தாதாக்களுடன் தொடர்பு இருந்ததும் தற்போது வெளியாகியிருக்கிறது. இதனால் இவர்கள் மீது மகாராஷ்ட்டிராவில் முக்கிய எம்.சி.சி.ஓ.ஏ., என்ற சிறப்பு குற்றச்சட்டத்தின் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனால இவர்கள் 3 பேரும் ஜாமினில் வர முடியாது.இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்ட விவகாரம் நாளுக்கு நாள் ஒவ்வொரு புதிய தகவலை தந்த வண்ணம் உள்ளது. இந்த சூதாட்டத்தில் மும்பை தாதாக்கள் பணம் புழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. பிரபல சர்வதேச குற்றவாளிகள் தாவூத் இப்ராகிம் மற்றும் ஷோட்டா ஷகீல் ஆகியோர் தரகர் மூலம் பணம் வைத்து சூதாடியுள்ளனர். தேச துரோகிகள் உடன் கிரிக்கெட் வீரர்கள் தொடர்பு வைத்திருந்ததது மும்பை போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

எனவே எம்.சி.சி.ஓ.ஏ., மகாராஷ்ட்டிரா கன்ட்ரோல் ஆப் ஆர்கனைஸ்டு கிரைம் ஆக்ட் என்ற சட்டத்தின் படி இவர்கள் மீது வழக்குப்பதியப்படுகிறது. இதற்கென சிறப்பு கோர்ட்டில் மும்பை போலீசார் அணுகியிருக்கின்றனர்.

இந்த சட்டத்தின் படி சாமானியத்தில் ஜாமின் வழங்க முடியாது. மேலும் போலீஸ் கஸ்டடியில் 30 நாட்களுக்கு மேலாக வைத்து விசாரிக்க முடியும். இவர்களுக்கு எதிராக யாரும் வாக்குமூலம் கொடுத்தால் இது ஒரு முக்கிய சாட்சியாக எடுத்து கொள்ளப்படும். இந்த வாக்குமூலம் எந்தவொரு மாநிலத்தில் உள்ள மாவட்ட எஸ்,பி., அலுவலகத்தின் மூலம் பதிவு செய்ய முடியும்.

ஜாமின் மனு தள்ளுபடி: இதற்கிடையில் இன்று டில்லி கோர்ட்டில் தாக்கல் செய்த கிரிக்கெட் வீரர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வரும் 18-ம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது















No comments:

Post a Comment