Search This Blog

Tuesday, 4 June 2013

ஆஸி. பிரதமர் பேட்டி இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை பேச்சுவார்த்தை நீடிக்கிறது

ஆஸி. பிரதமர் பேட்டி இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை பேச்சுவார்த்தை நீடிக்கிறது

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா பிரதமர் ஜூலியா கில்லார்ட் தன்னுடைய தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசி னார். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். இந்த கூட்டத்துக்கு பின்னர் அவர் அளித்த பேட்டி: இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய் வது தொடர்பான பேச்சுவார்த்தை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் விற்பனை செய்வதை தடுக்கும் முக்கிய சிக்கல் தீர்ந்து விட்டது. பாதுகாப்பான ஒப்பந்தம் தொடர்பாக இருதரப்பிலும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சில காலம் ஆவதை தடுக்க முடியாது. ஆனால், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்வது, உங்கள் தாய்நாட்டுடனான உறவை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன் என்பதுதான். இவ்வாறு ஜூலியா கில்லார்ட் கூறினார். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. இதனால்தான் யூரேனியம் விற்பனை நாடுகளிடம் இருந்து அதை பெறுவதில் பல சிக்கல் நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவிடம் ஒப்பந்தம் கையெழுத்தானால், அணுபரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் யூரேனியம் பெறும் முதல் நாடாக இந்தியா இருக்கும்.

No comments:

Post a Comment