Search This Blog

Monday, 3 June 2013

முதல் -அமைச்சர் ஜெயலலிதா சார்பில் நக்கீரன் கோபால் மீது அவதூறு வழக்கு

முதல் -அமைச்சர் ஜெயலலிதா சார்பில் நக்கீரன் கோபால்
மீது அவதூறு வழக்கு

சென்னை, ஜூன். 3-
முதல் - அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை செசன்சு கோர்ட்டில் மாநகர அரசு வக்கீல் எம்.எல். ஜெகன் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த ஏப்ரல் 13-ந்தேதி நக்கீரன் இதழில் ஜெ ஆட்சியில் கோடி கோடியாக கொள்ளை. தமிழகத்தை சுட்டெரிக்கும் ஊழல் என்ற தலைப்பில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் கற்பனையானது. ஆதாரமற்றது. பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசின் நற்பெயரை கெடுக்கும் விதமாக இந்த செய்தி உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், நிருபர்கள் இளையசெல்வன், ராமகிருஷ்ணன், முகில் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி பொன்கலையரசன் முன்பு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment