Search This Blog

Monday, 10 June 2013

வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம் : சென்னை ஐகோர்ட் ஸ்தம்பிப்பு

வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம் : சென்னை ஐகோர்ட் ஸ்தம்பிப்பு















         


        

       

சென்னை: சென்னை எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கன்னியாகுமரியிலும் இதேபோன்ற ஒரு சம்பவத்தில் வக்கீல்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி வக்கீல்கள் இன்று தமிழகம் முழுக்க கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மோதல் சம்பவத்தில் வக்கீல்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், சென்னையில் வக்கீல்களை சந்திக்க மறுத்த டிஜிபி ராமானுஜத்தை கண்டித்தும் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதனால் கோர்ட் பணிகள் ஸ்தம்பித்தன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் உள்ள கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் இன்று பணிக்கு வரவில்லை. வக்கீல்கள் சங்க தலைவர்கள் மோகனகிருஷ்ணன், பிரசன்னா, பிரபாகரன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கோர்ட் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வழக்குகளுக்காக கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அரசு வக்கீல்கள் மட்டும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

No comments:

Post a Comment