ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா இடை நீக்கம் : பிசிசிஐ அதிரடி நடவடிக்கை
புதுடெல்லி: ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரியை£ளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா கிரிக்கெட் நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் தமக்கு தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்ட ராஜ் குந்த்ரா, சூதாட்ட தொடர்பான விசாரணை முடியும் வரை கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் சண்டிலா ஆகியோருக்கு ஆயுட் கால தடை விதிப்பது குறித்து பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் உள்பட வீரர்களுக்கு ஆயுட் கால தடை விதிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment