Search This Blog

Monday, 10 June 2013

இலங்கை பிரச்னையில் எது இரட்டை வேடம்? : ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

இலங்கை பிரச்னையில் எது இரட்டை வேடம்? : ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை: இலங்கை பிரச்னையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் இருக்கின்ற மற்ற உணர்வுகளை திமுக மதிக்கின்றது. இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது பற்றிய விஷயத்தில், திமுகவின் உணர்வும் அதுதான். அதிலே எந்த வேறுபாடான எண்ணமும் நமக்கு இல்லை. இலங்கை பிரச்னை யில் இரட்டை வேடம் போடுவது மத்திய அரசு என்று ஜெயலலிதா குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் ஜெயலலிதாவின் லட்சணம் என்ன? இதே இலங்கை பிரச்னையில் ஜெயலலிதா போடாத இரட்டை வேடமா? 
16-4-2002ல் தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானத்தில், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசின் அனுமதியோடு, இந்திய ராணுவத்தை இலங்கை அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினாரே, அது இரட்டை வேடம் இல்லையா? கபட நாடகம் இல்லையா? ஜெயலலிதா விளக்குவாரா?

அப்பாவி ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தபோது, இறுதி போர் நடத்திய நேரத்தில், ராஜபக்ஷே நடத்தும் யுத்தம் தமிழர்களை எதிர்த்து அல்ல, விடுதலைப் புலிகளை எதிர்த்துதான் என்று ஜெயலலிதா கூறினாரா, இல்லையா? அது இரட்டை வேடம் அல்லவா?

ராஜபக்சே அரசு கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தபோது, 17-1-2009ல், இலங்கை தமிழர்களை கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை, ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று திருவாய் மலர்ந்தாரே, அது இரட்டை வேடமா? கபட நாடகமா?

இவ்வளவையும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக செய்துவிட்டு, தற்போது மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதே நேரத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிப்பதை எதிர்த்து, போராட்டம் நடத்திய 136 பேர் ஜெயலலிதா அரசின் காவல் துறையால் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது. கடிதத்தில் தெரிவித்து இருக்கும் கருத்துகள் உண்மையா? போராட்டம் நடத்திய
வர்களை கைது செய்தது உண்மையா? எது இரட்டை வேடம் என்பதை ஜெயலலிதா விளக்குவாரா
?

No comments:

Post a Comment