எங்களுக்கு தர வேண்டிய பணத்தை தாருங்கள்: மத்திய அரசுக்கு "அகஸ்டா வெஸ்ட்' கடிதம்
புதுடில்லி: ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழலில்தொடர்புடைய, இத்தாலியைச் சேர்ந்த,"அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனம்,மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.அதில், தங்களுக்கு சேர வேண்டியநிலுவை தொகையை, உடனே செலுத்தவேண்டும் என, தெரிவித்துள்ளது.
ரூ.362 கோடி லஞ்சம்:
வி.வி.ஐ.பி.,க்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்ததில்,ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததைஅடுத்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. மத்திய அரசிடமிருந்து, ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இத்தாலியை சேர்ந்த, "அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' என்ற, ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனம், இந்தியஅதிகாரிகளுக்கு, 362 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரம், வெளிச்சத்துக்கு வந்தது.இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு,30 சதவீத தொகை செலுத்திய நிலையில்,மீதமுள்ள தொகையை செலுத்தாமல்,மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில், அந்த நிறுவனம், ராணுவஅமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதம்:
தனித்தனியாக விசாரணை:
ஒப்பந்தத்துக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது குறித்து, இத்தாலியிலும், இந்தியாவிலும், தனித் தனியாக விசாரணைநடக்கிறது. எங்கள் நிறுவனத்தின்தலைமை நிர்வாகியாக இருந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணையின்முடிவில், உண்மை தெரிய வரும்.ஆனால், ஒப்பந்தப்படி, எங்களுக்குசெலுத்த வேண்டிய தொகையை, நிறுத்திவைத்தது தவறு. இது, ஒப்பந்த விதிமுறைகளை மீறும் செயல். நிலுவைதொகையை உடனடியாக செலுத்தவேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment