Search This Blog

Saturday, 8 June 2013

பா.ஜ.க., செயற்குழு கூட்டம் :மோடிக்கு தலைவர் பதவி?

பா.ஜ.க., செயற்குழு கூட்டம் :மோடிக்கு தலைவர் பதவி?

பாய்ச்சல் : கூட்டாட்சிக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு ஜூன் 09,2013
கோவா பா.ஜ., செயற்குழுவை அத்வானி புறக்கணிப்பு: வ
பனாஜி:கோவாவில் நடைபெற்று வரும் பா.ஜ.க., செயற்குழு கூட்டம் நேற்று முதல் இன்று வரை 2 நாட்களாக நடைபெறுகிறது.இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பிரசார குழு தலைவர் பதவி கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.ஏனென்றால் முன்னதாக கோவாவில் நடைபெற்று வரும் பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்தை அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி புறக்கணித்தார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முக்கியத்துவமும் கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் பதவியும் அளிக்கப்படுவதை எதிர்த்து அவர் இக்கூட்டத்தைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

தேசிய செயற்குழு கூட்டம்:கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக மோடியைத் தேர்வு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை இனியும் தாமதப்படுத்தாமல் செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

அத்வானி,உமா பாரதி மிஸ்ஸிங்:இந்நிலையில், எல்.கே.அத்வானி, ஜஸ்வந்த் சிங், உமா பாரதி, சத்ருகன் சின்ஹா போன்ற மூத்த தலைவர்கள் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அத்வானி கலந்து கொள்ளாததற்கு உடல்நல பாதிப்புதான் காரணம் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

சுஷ்மா சுவராஜ் எதிர்ப்பு:செயற்குழுக் கூட்டம் போன்ற முக்கியமான விவாதக் கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்ளாதது பா.ஜ.க.வின் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும். மோடிக்கு தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவர் பதவியை அளிக்க அத்வானிக்கு நெருக்கமான சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் செயற்குழுவில் எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கிண்டல்:இதனிடையே, பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுக்கு நரேந்திர மோடி மீதான அச்சம் காரணமாக குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கிண்டலடித்தது. இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ""நான் நல்ல உடல்நலத்துடன்தான் இருக்கிறேன். எனக்கு மோடி தொடர்பான காய்ச்சல் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், நான் கோவா செயற்குழுக் கூட்டத்துக்குச் செல்லாததற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன'' என்றார்.

பா.ஜ.க. துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் செயற்குழுக் கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, ""கோவாவில் பெரிய அறிவிப்பு ஒன்றை எங்கள் கட்சி வெளியிட உள்ளது. அது கட்சியை வலுப்படுத்துவதாகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மாற்றாக கட்சியை முன்னிறுத்துவதாகவும் இருக்கும். அத்வானி இல்லாமல் பெரிய முடிவை எடுக்க முடியுமா? என்று கேட்கிறீர்கள். அவர் செயற்குழுக் கூட்டத்துக்கு தனது ஆசி உண்டு என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்று நடக்கும்""செயற்குழுக் கூட்டத்தில் அத்வானி பங்கேற்றாலும் சரி, பங்கேற்காவிட்டாலும் சரி, மோடி தொடர்பான அறிவிப்பு நிச்சயம் வெளியிடப்படும்'' என்று இரண்டு மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment