Search This Blog

Sunday, 18 August 2013

சென்னையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை

சென்னையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை

சென்னையை அடுத்த பெரம்பூரைச் சேர்ந்த, கணவனை இழந்த வி‌தவைப் பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வியாசர்பாடியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் குறி சொல்லும் 48 வயது அறவாளி சித்தர் என்பவரிடம் அறிமுகமானார். அந்த சாமியாரும், பெண்ணின் குடும்ப மனகுறையை போக்குவதாக கூறி, கடந்த ஆண்டு இரவு பூஜை செய்வதாக கூறி 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை மகள், தாயிடம் சொல்லியும் அவர் கண்டு கொள்ளவில்லையாம். மேலும் அந்த சிறுமியை சித்தரின் நண்பர்கள் உள்பட பலர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில்

அவருக்கு தெரியாமல் சிறுமி தப்பி சென்று திருப்பதி வந்துள்ளார்.தினமும் இரவில் அந்த சிறுமி பக்தர்கள் வரிசையில் அமர்ந்து தூங்கியதை பார்த்து சந்தேகித்து போலீஸார் விசாரித்தபோது அந்த சிறுமி இதனை கூறினார்.இது தொடர்பாக சிறுமியின் தாய் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளளனர். உடல் நிலை பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.இந்நிலையில் சாமியார் வீட்டில் போலீஸார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

No comments:

Post a Comment