3 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மன்னன் கைது
கோவை: ராணுவ அதிகாரி எனகூறி 3 பெண்களை திருமணம் செய்த கல்யான மன்னனை டெல்லியில் போலீ சார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் பாய்ஸ் கம்பெனியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் பிலிப்ஜோசப் (33). இவர் ராணுவத் தில் அதிகாரியாக பணியாற்றுவதாக கூறி 2003ல் கன்னியாகுமரியை சேர்ந்த திவ்யாவை மணமுடித் தார். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்னர் 2006ல் ஓடந்துறையை சேர்ந்த புஷ்பலதா, 2010ல் கணபதியை சேர்ந்த ரம்யா, 2013ல் ராமநாதபுரத்தை சேர்ந்த பிரேமாவை அடுத்தடுத்து ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை திருமணம் செய்தார். இதில், புஷ்பலதா, ரம்யா மூலம் 3 குழந்தைகள் உள்ளன. பிலிப்ஜோசப்பின் இந்த மோசடி குறித்து அறிந்த புஷ்பலதா, ரம்யா, பிரேமா ஆகியோர் நடவடிக்கை கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மே மாதம் தர்ணா நடத்தினர். கிழக்கு பிரிவு மகளிர் போலீசார் பிலிப்ஜோசப் தாயார் மேரி, தங்கை உஷா ஆகியோரை கைது செய்தனர். பிலிப்ஜோசப்பை தேடி வந்தனர். இந்நிலையில், பிலிப்ஜோசபை டெல்லியில் சில தினங்களுக்கு முன் பிடித்தனர்.போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்
No comments:
Post a Comment