புல்லாரின் கடைசி முயற்சியும் தோல்வி: மறு ஆய்வு மனு தள்ளுபடியானதால் தூக்கு உறுதி
புதுடில்லி :காலிஸ்தான் பயங்கரவாதி, புல்லாருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க கோரி, அவரது மனைவி, சுப்ரீம் கோர்ட்டில், தாக்கல் செய்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
டில்லியில், 1993ல், நடந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில், காலிஸ்தான் பயங்கரவாதி, புல்லார் கைது செய்யப்பட்டார். அவருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கருணை மனு, ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து புல்லாருக்கு கருணை காட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேயே கட்ஜூ ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அதில், புல்லார், நோயால் அவதிப்படுவதால் அவருக்கு கருணை காட்ட வேண்டும் என கூறினார். இதேபோல் சிரான்மணி அகாலிதளம் மற்றும் சிரோன்மணி குருத்வாரா பர்பந்தக் கமீட்டியும், பிரதமர் மன்மோகன் சிங்கிடம், புல்லாருக்கு கருணை காட்ட வேண்டுகோள் விடுத்தன.
இதனைதொடர்ந்து, புல்லார் சார்பில், கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க கோரி, ஜனாதிபதியிடம், 2003ல், கருணை மனு அளித்தேன். ஆனால், இந்த மனுவை பரிசீலிக்க, எட்டு ஆண்டுகள் தாமதமாகி விட்டது. கடந்த, 2011ல், தான், கருணை மனு, நிராகரிக்கப்பட்டது. எனவே, கருணை மனுவை தாமதமாக பரிசீலித்த காரணத்துக்காக, தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, குறைக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில், புல்லார் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், "பயங்கவாத செயல்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்தவர்களுக்கு, கருணை மனு தாமதமாக பரிசீலிக்கப்பட்டது என்ற காரணத்துக்காக, தூக்கு தண்டனையை குறைக்க முடியாது' என, தீர்ப்பளித்தது.
இதையடுத்து, புல்லாருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புல்லார் மனைவி, சுப்ரீம் கோர்ட்டில், , மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். மனு விசாரித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.இதனால் அவரின் தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.
No comments:
Post a Comment