Search This Blog

Tuesday, 13 August 2013

எல்லையில் தாக்குதலை பாக்., நிறுத்த வேண்டும்: வெளியுறவுத்துறை கண்டிப்பு

எல்லையில் தாக்குதலை பாக்., நிறுத்த வேண்டும்: வெளியுறவுத்துறை கண்டிப்பு

புதுடில்லி: ‌எல்லையில் தாக்குதலை பாகிஸ்தான் .நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை ‌செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். காஷ்மீர் மாநிலம் இந்தியா-பாக். எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பூஞ்ச், உள்ளிட்ட இந்திய நிலைகள் மீது பாக்.,ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பல முறை தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 6-ம் தேதி நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் ‌கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் பார்லி.,யில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்த மத்திய ராணுவ அமைச்சர் அந்தோணியின் முரண்பட்ட தகவல் ,எதி்ர்க்கட்சிகளை அதிருப்தியடைய வைத்துள்ளது.இனி பாகிஸ்தானுடன் இந்தியா உறவு வைத்துக் கொள்ளகூடாது என பா.ஜ. தலைவர்கள் வலியுறுத்தி வருகி்ன்றனர்.
இந்த சூழ்நிலையில் பாக். பிரதமர் நவாஸ்‌ ஷெரீப் கூறுகையில், இந்தியாவின் உறவு எங்களுக்கு ‌எப்போதும் தேவை, பாகி்ஸ்தானுடன் உறவை மேம்படுத்திட பேச்சுவார்த்தைக்கு இந்தியா வரவேண்டும் என்றார். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை ‌சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.
தாக்குதலை நிறுத்துங்கள்
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், சையத் அக்பருதீன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, எல்லையில் பாக்.,ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். கடந்த வாரம் எல்லைக்கட்டுபபாட்டு கோடு பகுதியி்ல் இந்திய வீரர்கள் ஐந்து பேரை சுட்டுக்‌கொன்றதற்கு பாக்.,பதில் சொல்ல வேண்டும். கொல்லப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது பாக்.,நடவடிக்கை எடுக்க வேண்டும். நட்புறவான சூழ்நிலையையும், அமைதியான சூழ்நிலையையும் பாக்., ஏற்படுத்தினால் தான் பேச்சுவார்த்தை குறித்து இந்தியா பரி‌சீலிக்கும்.இவ்வாறு அவர் ‌கூறினார்.

No comments:

Post a Comment