பெட்ரோல் பயன்பாடு டூவீலர்களுக்கு 67%, கார்களுக்கு 27% : ஆய்வில் தகவல்
புதுடில்லி : வசதிபடைத்தவர்களுக்கு பெட்ரோலுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்தஅரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் வசதி படைத்தவர்களை விட நடுத்தர வர்க்கத்தினர் தான் பெட்ரோலை அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போர் 67 சதவீதம் பெட்ரோலை பயன்படுத்துகின்றனர். இவற்றில் 2 சதவீதம் பெட்ரோல் தொலைதூர கிராமங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களால் வீணடிக்கப்படுகிறது.
பெட்ரோலுக்குகான ஆய்வு :@@ பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் ஆய்வு திட்டத்திற்காக நீல்சன் நிறுவனம், நாட்டின் பெட்ரோலிய பயன்பாடு குறித்த ஆய்வை நடத்தியது. இதில் கார்கள் வைத்திருப்போர் 27 சதவீதம் பெட்ரோலையும், மூன்று சக்கரவாகனம் வைத்திருப்போர் 6 சதவீதமும், 2 சதவீதம் பெட்ரோல் ஜெனரேட்டர் உள்ளிட்ட பிற பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் 67 சதவீதம் பெட்ரோலை பயன்படுத்துகின்றனர்.
எண்ணெய் இறக்குமதி செலவு : @@இந்த ஆய்வின் ஒரு பகுதியாக உள்நாட்டு எண்ணெய் சந்தையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையும் பெட்ரோலிய அமைச்சகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக நாட்டின் எண்ணெய் இறக்குமதி அதிகரித்து வருகிறது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதத்தில் எண்ணெய் இறக்குமதிக்காக ரூ.347,432 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்படும் மானியத்திற்கான செலவு ரூ.180,000 கோடியாகும். கடந்த வாரம் பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி துவங்கி வைத்த எரிபொருள் பயன்பாடு குறித்த பேரணி, நாட்டின் எரிபொருள் தேவை அதிகரித்து வருவதை வலியுறுத்தி உள்ளது.
பெட்ரோல் பயன்பாடு :@@ பெட்ரோல் பயன்பாடு 16 மில்லியன் டன்னை எட்டி உள்ளது. இதில் 4 சதவீதம் வாகனங்கள் பயன்பாட்டின் போது வீணடிக்கப்படுகிறது. தொலைதூர கிராமங்கள், கடற்கரை பகுதிகளில் உள்ள மக்கள் சில்லரை விலையில் பீப்பாய்கள் மற்றும் கேன்களில் வாங்கிச் சென்று மீன்பிடி படகுகள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றிற்கு பயன்படுத்துகின்றனர். இதனால் பெட்ரோல் வீணடிக்கப்படுகிறது. 66 சதவீதம் எரிபொருள் போக்குவரத்திற்கும், 19 சதவீதம் விவசாயத்திற்கும், 2 சதவீதத்திற்கும் அதிகமாக மொபைல் டவர்களுக்கும் மீதமுள்ளவை கட்டிடப்பணி, ஜெனரேட்டர்கள் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டீசல் பயன்பாடு :@@ 69 மில்லியன் டன் டீசல் பயன்படுத்தப்படுகிறது. இதில் கனரக வாகனங்கள், மினி வேன்கள், லாரிகள், பஸ்கள் ஆகியவற்றிற்கு 38 சதவீதம் நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டு கார்கள் உள்ளிட்ட கார்களுக்கு 19 சதவீதம் டீசல் பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால் டீசல் கார்களின் விற்பனை சமீப காலமாக அதிகரித்துள்ளது. அரசால் எரிபொருளுக்காக வழங்கப்படும் மானியத்தால் அதிகம் பயன்பெறுபவர்கள் டாக்சி ஓட்டுனர்கள் தான். டீசல் கார்கள் தென்னிந்தியாவில் 20 சதவீதமும், கிழக்கிந்தியாவில் 16 சதவீதமும் உபயோகிக்கப்படுகிறது. அதிகபட்சமாக தென்னிந்தியாவில் போக்குவரத்திற்காக 77 சதவீதம் டீசலும், குறைந்தபட்சமாக வடஇந்தியாவில் 59 சதவீதமும் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் வடஇந்தியாவில் விவசாயத்திற்காக 24 சதவீதத்திற்கும் அதிகமான டீசலும், தென்னிந்தியாவில் 10 சதவீதம் டீசலும் பயன்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment