அவசர சட்டம் மூலம் கிரிமினல் மக்கள் பிரதிநிதிகளை காப்பாற்ற முயற்சி
புதுடில்லி: கோர்ட் உத்தரவினையும் மீறி கிரிமினல் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரை காப்பாற்றும் விதமாக அமைச்சரவையை கூட்டி அவசர சட்டத்தை இயற்ற மத்திய அரசு முயற்சி செய்வதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
ஊழல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் என அழைக்கப்படும் கிரிமினல் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் பதவியை பறிக்கலாம். சிறையில் இருந்தால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தியை தெரியப்படுத்தின. இந்த விகாரத்தில் புதிய சட்ட திருத்தம் தேவை எனகடந்த சில மாதங்களுக்குமுன் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் ஒன்று சேர வலியறுத்தின. ஊழல் வழக்கில் கோர்ட் விசாரணையில் உள்ள லாலுபிரசாத் உள்ளிட்டோர் சட்டதிருத்தம் தேவை என வலியுறுத்தினர்.
மறுசீராய்வு மனு
இதனை பரிசீலித்த மத்திய அரசு,அமைச்சரவையை கூட்டி ,சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுவை தாக்கல்செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கிரிமினல் வழக்கில் தண்டனை விதிக்கும் தீர்ப்பு சரிதான் எனவும், ஆனால் மத்திய அரசு சட்டதிருத்தம் கொண்டுவந்தால் கோர்ட் தலையிடாது எனவும் கூறியது.கடந்த சில நாட்களுக்கு முன், காங்.எம்.பி. ரஷீத் மசூத் என்பவர் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று,சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பதவியை இழக்கும் முதல் எம்.பி. என கூறப்பட்டார்.
அவசர சட்டம்
இதையடுத்து மத்திய அரசு, அரசியலமைப்பின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(4)-ன் பிரிவை ரத்து செய்யும் அவசர சட்டத்தை கொண்டுவர உள்ளது.இதன்படி இன்று நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டம் மூலம் கிரிமினல் மக்கள் பிரதிநிதிகளை காப்பாற்றும் வகையில் அவசர சட்டம் கொண்டுவரப்படுகிறது. புதிய சட்டதிருத்தத்தின்படிகுற்றவழக்குகளில் தண்டனை மக்கள் பிரதிநிதிகள் (எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்) , தகுதி நீக்கம் செய்ய முடியாது, மாறாகதண்டனை பெற்ற90 நாட்களில் மேல் முறையீடு செய்யும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரவும், அதனை அவசர சட்டமாக நிறைவேற்றவும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவி்ற்கு பல்வேறு சமூக அமைப்புகள், எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment