Search This Blog

Monday, 2 September 2013

‌பெட்ரோல் வ‌ிலை- தெலுங்கானா ; பார்லி.யில் கூச்சல் - அமளி

‌பெட்ரோல் வ‌ிலை- தெலுங்கானா ; பார்லி.யில் கூச்சல் - அமளி

புதுடில்லி : :பார்லி. கூட்டம் துவங்கியது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டதற்குநாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும் அமளி ஏற்பட்டதால்இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக இதையடுத்து கேள்வி‌ நேரத்தை ரத்து செய்துவிட்டு, பெட்ரோல் , டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும், அதுவரை கேள்விநேரத்தை ரத்து செய்ய வேண்டும் என பா.ஜ. மற்றும் திரிணாமுல் காங். கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதையடுத்து கேள்விநேரத்தை துவக்கவிடாமல், ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டதால், அமளி ஏற்பட்டது. இதையடுத்து ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. இதே போன்று தெலுங்கான விவகாரத்திலும் லோக்சபாவில் அமளி ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து லோக்சபாவில் தெலு்ங்கானாவுக்கு எதிராக ஆந்திர எம்.பி.க்கள்கூச்சலிட்டதால்,9 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆர்.டி.ஐ. திருத்த மசோதா
அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் மசோதா திருத்தி அமைக்கப்பட்டு, லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகள் குறித்து தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்கும் சட்ட மசோதா மீது இன்று விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்ட மசோதாவில் திருத்தம் : @@அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரும் சட்ட மசோதாவிற்கு பாரபட்சமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து அந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வரவும், அரசியல் கட்சிகளை ஆர்.டி.ஐ., கீழ் கொண்டு வருவதில் இருந்து விலக்கு அளிக்கவும் மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்பதல் அளித்தது. இதன் காரணமாக மத்திய தகவல் கமிஷனுக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உத்தரவிடப்பட்டது. இந்த திருத்தம் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்ட மசோதாவை ஆகஸ்ட் 12ம் தேதியன்று பார்லி., கீழ் சபையில் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்தார். ஆனால் தொடர்ந்து அமளி, அடுத்தடுத்த அவை ஒத்திவைப்பு நடவடிக்கைகளால் இந்த மசோதா மீது விவாதம் நடைபெறவில்லை.

திருத்தம் ஏன்? : @@காங்கிரஸ், பா.ஜ., தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 6 முக்கிய தேசிய கட்சிகளை ஆர்.டி.ஐ., கீழ் கொண்டு வர மத்திய தகவல் கமிஷன் உத்தரவிட்டது. இதற்கு இக்கட்சிகள் சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய தகவல் கமிஷனின் உத்தரவு வந்த 2 மாதங்களுக்கு பின், சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. பொது அதிகார வரம்பின் எதிர்ப்புக்களில் இருந்து அரசியல் கட்சிகளை பாதுகாப்பதற்காக அரசு இந்த திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் திருத்தப்பட்ட மசோதா பார்லி., ஒப்புதலை பெற்றுவிட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் எந்த ஒரு அரசியல் கட்சியிடமும் மக்கள் தரப்பில் இருந்து விளக்கம் கேட்க முடியாது. ஆர்.டி.ஐ.,யின் ஏராளமான நடவடிக்கைகளில் திருத்தம் கொண்டு வரவும் பல்வேறு தரப்புகளில் இருந்த வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ராஜ்யசபாவில் உணவு மசோதா : @@தேசிய உணவு பாதுகாப்பு மசோதா ஆகஸ்ட் 26ம் தேதி லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2014 லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்ட இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அவசர சட்டமாக கொண்டு வந்தது. 2009ம் தேர்தலுக்கு முன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி ஆகிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து காங்கிரஸ் தலைமையிலான அரசு 2வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. இதே போன்று உணவு பாதுகாப்பு மசோதாவும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் என காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment