யாருடன் கூட்டணி: வைகோ முடிவு!
‘‘ரவுடிகளை கண்காணிக்க உத்தரவிட்டிருக்கா ஓய்...’’ என்றபடி அடுத்த விவாதத்திற்குள் நுழைந்தார் குப்பண்ணா.
‘‘எங்கே வே...’’ எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
‘‘மதுரையில, பழிக்கு பழி கொலைகள் நடந்துண்டு இருக்கு... கொலையை நிறைவேத்த, சில ரவுடிகள், ஜாமின்ல போறா... கொலை, கொள்ளையை முடிச்சுட்டு, தலைமறைவாயிடறா... சமீபத்துல, கட்சி பிரமுகரின் உறவினர் கொலையில் சந்தேகப்படும் குற்றவாளி, சில நாளுக்கு முன்பு தான், சிறையிலிருந்து வெளியில் வந்தார்... இவர் வில்லங்கமான ஆளுன்னு புரிஞ்சுண்ட போலீசார், ‘அலர்ட்’ ஆனா... ஆனா, போலீசாருக்குத் தெரியாமலேயே, கொலை நடந்துடுத்து...
‘‘இனிமேலும், இப்படி விடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, ஜாமின்ல போற ரவுடிகளை, தொடர்ந்து கண்காணிக்கணும்ன்னு, உளவுத் துறைக்கு உத்தரவு போட்டிருக்கா ஓய்...’’ எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.
“மோசடிக்கு துணை போனவருக்கு, ஒரு கோடி லாபமாங்க...” என, அடுத்த மேட்டருக்குள் நுழைந்தார் அந்தோணிசாமி.
“எந்தத் துறையில பா...” எனக் கேட்டார் அன்வர்பாய்.
“பத்திரப்பதிவு துறையில சொத்து விற்பனையை பதிவு செய்யணும்னா, நிலத்துக்கு இப்ப உள்ள கைடுலைன் வேல்யுவ மதிப்பிடணும்... அதேபோல, அங்க இருக்கும் கட்டடத்துக்கும் மதிப்பு போடணும்... இந்த ரெண்டு மதிப்பும் துல்லியமா இருக்கணும்கிறது விதி... ஆனா, ஸ்ரீபெரும்புதுார்ல, 110 கோடிக்கு ஒரு தனியார் கம்பெனி கைமாறினதுல, இந்த விதிகள் அப்பட்டமா மீறப்பட்டிருக்காங்க...
“மொத்தம், 80 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்துக்கு, 30 கோடி ரூபாய் போட்டுட்டு, இயந்திரங்களை மறைச்சுட்டு கம்பெனி கட்டடத்தை கிடங்கா கணக்கு காட்டி பத்திரப்பதிவு செய்திருக்காங்க... இதனால, அரசுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் கிடைக்கலைங்க... ஆனா, இதுக்கு துணை போன பெரிய அதிகாரிக்கு ஒரு கோடி ரூபாய் கைமாறியிருக்காங்க... துறை அமைச்சருக்கு கூட, தெரியாம நடந்த இந்த, ‘டீலிங்’ பத்தி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்காதான்னு பதிவுத்துறை தலைமை அலுவலகத்துல பேசிக்கிறாங்க...” என்று முடித்தார் அந்தோணிசாமி.
''பா.ஜ.,வுடன் கூட்டணி உண்டுன்னு மறைமுகமாக சொல்லிட்டாரு பா..." என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''யாருன்னு சொல்லும் ஓய்..." என்றார் குப்பண்ணா.
''ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் சமீபத்துல, தாயகத்துல நடந்துச்சு... அதுல பேசிய, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, ‘சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, நமது ரத்தத்தை சிந்தியிருக்கிறோம்... நம்மால் பயன்பட்டவர்கள் தான் உண்டு... நம்மை மதிக்கிற கட்சியோடு தான், இனிமேல் கூட்டணி’ன்னு சொல்லிட்டு, பா.ஜ., ஆட்சியை பற்றி பெருமையாக பேசினாரு... அவரது மறைமுகமான பேச்சு, பா.ஜ., கூட்டணியில, ம.தி.மு.க., இடம் பெற வாய்ப்பு இருக்குன்னு புரிஞ்சு போச்சு பா...’’ எனக் கூறி முடித்தார் அன்வர்பாய். டீ குடித்த நண்பர்கள் கிளம்பவே, பெஞ்ச் அமைதியானது!
பா.ஜ., – அ.தி.மு.க., கூட்டணி?
‘‘ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் அமைச்சாங்கன்னா, அதுக்குன்னு தனி போலீசு போடக் கூடாதா...’’ என, கேள்வி எழுப்பியபடியே, நாயர் கடைக்கு வந்தார்
அன்வர்பாய்.
‘‘என்ன வே சொல்லுதீரு... எதுக்கு இப்ப, போலீசு...’’ எனக் கேட்டார் அண்ணாச்சி.
‘‘இந்து அமைப்பு நிர்வாகிகள் கொலை வழக்கு, பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்குல, தலைமறைவாக உள்ள, ‘போலீஸ்’ பக்ருதீன் உட்பட, சிலரைப் பிடிக்க, ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீமை, முதல்வர் ஜெ., துவக்கினாங்க இல்லியா... ஆனா, அதுக்குன்னு, தனி போலீசை நியமிக்கவில்லை... சி.பி.சி.ஐ.டி., பிரிவுல இருக்குற போலீசாரை, இரவல் வாங்கி தான் சமாளிச்சிட்டு வர்றாங்க... எஸ்.ஐ.டி.,க்குன்னு, தனி போலீசாரை நியமிக்காதவரை, குற்றவாளிகளை பிடிக்க முடியாதுன்னு, சக போலீசாரே பிரசாரம் செய்யாத குறையா பேசிட்டிருக்காங்க பா...’’ எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.
‘‘வெட்டு, குத்துன்னு கிளம்பினா, வெளியில தலை காட்ட முடியாதுங்கறது தெரிஞ்சும், சில பேரை மாத்த முடியல...’’ என, ‘திடுக்’ தகவலை, மிகச் சாதாரணமாகச் சொன்னார் குப்பண்ணா. மூவரும் அதிர்ந்தனர். ‘‘என்ன பா... யாரு இப்ப கிளம்பி இருக்காங்க...’’ எனக் கேட்டார் அன்வர்பாய்.
‘‘மதுரையில், மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்களா இருந்த, தி.மு.க.,வின் வி.கே.குருசாமிக்கும், அ.தி.மு.க.,வின் ராஜபாண்டிக்கும் ஆரம்பத்திலிருந்தே ஆகாது ஓய்... தேர்தல்ல ஆரம்பிச்ச பகை, இன்னும் ஓயலை... .ரெண்டு தரப்பிலும், மாறி மாறி வெட்டிண்டு இருக்கா... இதுவரை, நாலு பேர் கொல்லப்பட்டிருக்கா ஓய்...
‘‘சமீபத்தில், குருசாமியின் தங்கை கணவரை, எதிர்தரப்பினர், ‘போட்டு’ தள்ளிட்டா... பதிலுக்கு, இந்த சைடுல ஒருத்தரை, ‘போட்டு’ட்டா... இப்படி மாறி, மாறி வெட்டிண்டு இருக்கறதனால, என்ன செய்யறதுன்னு போலீசார் திணறிண்டு இருக்கா ஓய்... அடுத்தடுத்து கொலை அரங்கேறியதனால, குருசாமிக்கு, நெஞ்சுவலியே வந்துடுத்து... இதனால, மருத்துவமனையில் பாதுகாப்பா, ‘அட்மிட்’ ஆயிட்டார் ஓய்... முன்னாடி, அழகிரி ஆதரவாளராக இருந்த இவர், இப்போ ஸ்டாலின் ஆதரவாளராக மாறிட்டார் ஓய்...’’ எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.
மற்றவர்கள் விக்கித்து நின்றனர்... நிலைமையை சகஜமாக்க, அண்ணாச்சி துவங்கினார், கடைசி தகவலை...
‘‘அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி மலருமான்னு, அ.தி.மு.க.,வினர் எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாவ வே..." என்ற அண்ணாச்சியிடம், ‘‘என்ன சொல்றீர்... இவா தான், காங்கிரசுக்கு ரூட்டு போடறா மாதிரி தெரியறதே...’’ எனக் கேட்டார் குப்பண்ணா.
‘‘விசயத்தைக் கேளும் வே... திருச்சியில நடந்த இளந்தாமரை மாநாட்டுல, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடிக்கு வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் கூட்டத்தை கண்டு, ஆளுங்கட்சியினர் மிரண்டு போயிருக்காவ... மோடி கூட்டத்துக்கு வந்த நடுநிலையாளர்களின் ஓட்டுக்கள் ஏற்கனவே, ஆளுங்கட்சிக்கு விழக்கூடிய ஓட்டுகள் தான்... ஆனா, இந்த முறை மோடிக்கு தான் ஓட்டு போடணும்னு, முடிவு எடுத்திருக்காவ... அதாவது, பா.ஜ., யாரோட கூட்டணி வைக்குதோ, அந்த கட்சிக்கு... இப்ப புரியுதா கணக்கு...’’ என்றவாறே, நடையைக் கட்டினார் அண்ணாச்சி. மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது!
No comments:
Post a Comment