உ . பி.,யில் மீண்டும் டென்ஷன் ; போலீசார் மீது கல்வீசி தாக்குதல்
மீரட் : கடந்த மாதத்தில் நடந்த கலவரத்தில் 45 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த டென்ஷன் அடங்கி முகாம்களில் தங்கி இருப்பவர்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்கு செல்லும் முன்னதாக மீண்டும் மீரட் நகரில் ஒரு டென்ஷன் உருவாகியிருக்கிறது.
முஷாப்பர் நகரில் நடந்த வகுப்பு மோதலில் இரு பிரிவினர் கடுமையாக மோதிக்கொணடனர். இதில் 45 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தினால் ஆளும் அகிலேஷ் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. இங்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்க அரசு தவறி விட்டது என இங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சியினர் கோரினர்.
கலவரம் தொடர்பாக பா.ஜ., மற்றும் பகுஜன்சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இதில் 3 எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பா.ஜ.எம்.எல்.ஏ., சோம் கைதுக்கு கண்டித்து இன்று மீரட் அருகே பஞ்சாயத்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் இந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தனர். இதனையடுத்து அங்கு கூடியவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் முயற்சித்தனர், இந்நேரத்தில் போலீசார் மீது கல்வீசி தாக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். இதில் போலீசார் தடியடி நடத்தினர் . தொடர்ந்து கணணீர் புகையும் வீசப்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக60பேர் கைதாகினர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி ருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மோதல் காரணமாக 13 போலீசார் காயமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment