கால்நடைத்தீவன ஊழல்; லாலுவுக்கு 'லாடம் ' ?
ராஞ்சி: குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டால் தேர்தலில் நிற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிய பின்னர் இன்று வெளிவரும் தீர்ப்பு ஒரு பெரும் அரசியல் புள்ளியை பொது வாழ்வில் இருந்து நீக்கிட வகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ரூ. 38 கோடி வரை மாட்டுத்தீவனம் வாங்கியதாக கள்ளக்கணக்கு எழுதிய முன்னாள் முதல்வர்கள் , அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் என 40 க்கும் மேற்பட்டோர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது. 20 ஆண்டுகளாக பல்வேறு வாய்தாக்கள் மூலம் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்ககில் இன்று வெளியாகும் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1990 முதல் நடந்த ஊழல் மத்திய கணக்காயம் மூலம் வெளி உலகிற்கு வந்தது. பின்னர் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து ஆதாரங்கள் திரட்டியது. இந்த வழக்கில் ராஞ்சி கோர்ட் இன்று காலையில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று என்ன தீர்ப்பு வழங்கும் ? @@முன்னாள் முதல்வர்கள், லாலு பிரசாத் யாதவ், ஜெகன்னாத் மிஸ்ரா, மாஜி அமைச்சர் பிரித்மிஸ்ரா உள்ளிட்ட 45 பேர் குற்றவாளிகள் ஆவர். இன்று தீர்ப்பு வழங்கவிருப்பதையொட்டி லாலு உள்பட குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜராகியுள்ளனர். தீர்ப்பை முன்னிட்டு இங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று வெளிவரும் தீர்ப்பை அடுத்து லாலுவின் அரசியல் எதிர்காலம் முடிவு செய்யப்படவுள்ளது.
* இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லாலு 135 நாட்கள் சிறையில் இருந்தார்.
* 1997 ல் இது தொடர்பாக இவர் பதவியில் இருந்து விலக வேண்டும் .
* மொத்தம் 56 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டதில் 7 பேர் இது வரை இறந்து விட்டனர்
சாதகமான தீர்ப்பு வரும் லாலு :
கோர்ட்டுக்கு வந்த லாலு நிருபர்களிடம் பேசுகையில் ; இந்த வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளிவரும், தீர்ப்புக்கு பின்னர் எங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஆர்டருக்காக காத்திருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment