Search This Blog

Friday, 6 September 2013

கற்பழிப்பு குற்றவாளி சைக்கோ ஜெய்சங்கர் சிக்கினான்

கற்பழிப்பு குற்றவாளி சைக்கோ ஜெய்சங்கர் சிக்கினான்

பெங்களூரு:பெங்களூரூ சிறையி்ல்இருந்து தப்பியோடியசைக்கோஜெய்சங்கர் இன்று கர்நாடகா போலீசாரிடம் சிக்கினான்.சேலத்தைச் சேர்ந்தவன் ஜெய்சங்கர், 40. தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில், இவன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கொலை, பாலியல் பலாத்காரம் உட்பட, பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய, தமிழகத்தைச் சேர்ந்த இவ‌னைமூன்று மாநில போலீசாரும், தேடி வந்தனர்.கடந்த, 2011ல், பிஜாப்பூர் மாவட்டத்தில், கர்நாடக போலீசார், அவனைக் கைது செய்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து தப்பினான்
கடந்த வாரம்ஒரு வழக்கு விசாரணைக்காக, அவனை தும்கூருக்கு அழைத்துச் சென்று, மீண்டும் சிறைக்குபோலீசார் அழைத்து வந்தனர். அப்போது, நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் கூறியதால், சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அன்று காலை, 6:00 மணிக்கு, கைதிகளை எண்ணும் போது, ஜெய்சங்கர் தப்பியோடியது தெரியவந்தது. உடனடியாகச் சிறையின் சுற்றுப்புறப் பகுதிகளில் போலீசார் தீவிரமாகத் தேடினர்.
தப்பியோடிய ஜெய்சங்கரின் போட்டோ உள்ளிட்ட அனைத்துத் தகவலையும், தமிழக போலீசாருக்கு தெரிவித்து, அவனைப் பிடிக்கும்படி கர்நாடக போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் ‌ஜெய்சங்கரை பிடிக்கரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெய்சங்கர் தப்பியோடியது தொடர்பாக, பரப்பன அக்ரஹாரா சிறைச் சாலையின் ஏ.எஸ்.பி., உட்பட, 11 பேர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
போலீசாரிடம் சிக்கினான்
இந்நிலையில் இன்று பெங்களூரூ, பொம்மனஹள்ளியை அடுத்த, குட்லுகேட் பகுதியி்ல் பதுங்கியிருந்தஜெய்சங்கரை கர்நாடக போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்த அவனிடம் விசாரணை நடக்கிறது. ஜெய்சங்கர் கைதானது குறித்து ,இன்று மாலை பெங்களூரூ போலீஸ் கமிஷனர் ரா‌கவேந்திர அவுராத், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க உள்ளார்.

No comments:

Post a Comment