பிலிப்பைன்சில் பூகம்பம்: 100 பேர் பலி
மணிலா :
பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏற்பட்ட பூகம்பத்தால், 100 பேர் பலியாயினர். பிலிப்பைன்ஸ் நாட்டின், இரண்டாவது முக்கிய நகரம் செபு. கடற்கரை நகரமான இங்கு,7.1 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதனால், ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி, 100 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பிலிப்பைன்சின், போஹால் தீவில், சாக்லேட் குன்றுகள் உள்ளன. சுற்றுலா தலமான இங்கு பூகம்பத்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும், 60 பேர் பலியாகியுள்ளனர். கப்பல் தயாரிக்கும் தொழிற்சாலைகள், செபு நகரில் உள்ளதால், மக்கள் நெருக்கம் இந்நகரில்அதிகம். எனவே, நேற்றைய பூகம்பத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம், என அஞ்சப்படுகிறது.
No comments:
Post a Comment