இந்தியாவில் 21 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்: ஆய்வில் தகவல்
புதுடில்லி :
இந்தியாவில் மட்டும் சுமார் 21 கோடி மக்கள் பசியால் வாடி வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது உலகம் முழுவதும் பசியால் வாடுபவர்களில் 4ல் ஒரு பங்கு ஆகும். ஆனால் இந்தியாவை பொறுத்த வரையில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட தற்போது குறைந்துள்ளதாகவே ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆய்வில் தகவல் :
@@ உலகம் முழுவதும் தானிய உற்பத்தி 2,489 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்திருப்பதாக சமீபத்தில் உலக உணவு உற்பத்தி கழகத்தால் தகவல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 2011-2013 ஆண்டுகளில் உலகில் பசியால் வாடுபவர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் உலகம் முழுவதும் 842 மி்ல்லியன் மக்கள் பசியால் வாடி வருவது தெரிய வந்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 21 கோடி பேர் பசியால் வாடி வருகின்றனர். இருப்பினும் 2010-12 ம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 870 மில்லியனில் இருந்து தற்போது 842 மில்லியனாக குறைந்துள்ளதாக ஐ.நா.,வின் சார்பு அமைப்பான உணவு மற்றும் வேளாண் கழகம் தெரிவித்துள்ளது.
ஆய்வு விபரம் :
@@ 2013ம் ஆண்டில் உலகில் பசியால் தவிப்போர்கள் குறித்து 120 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு உடைய 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் அளவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் உயிரிழப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச உணவு கொள்கை ஆய்வு கழக மற்றும் 2 சர்வதேச தொண்டு நிறுவனங்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய புள்ளிவிபரம்:
@@ இந்தியாவில் ஊட்டச்சத்து குறைப்பாடு 21 சதவிதத்தில் இருந்து 17.5 சதவீதமாக குறைந்துள்ளது. இதே போன்று ஊட்டச்சத்து குறைபாட்டால் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் 43.5 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2003-07 மற்றும் 2008-12 ஆகிய ஆண்டுகளில் பசியால் வாடியவர்கள் குறைவாகவே இருந்துள்ளனர். ஆனால் ஊட்டச்சத்து குறைபாட்டால் எடை குறைந்த குழந்தைகள் குறித்த ஆய்வு அறிக்கை கடைசியாக 2004-05 ஆண்டிலேயே வெளியிடப்பட்டுள்ளது.
ஊட்டசத்து குறைபாடு :
@@ மிக சமீபகாலமாக இந்தியாவில் ஊட்டசத்து குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1993-94 ம் ஆண்டில் சராசரியாக ஒருவர் நாள் ஒன்றிற்கு உண்ணும் உணவில் ஊட்டச்சத்து அளவு 2020 கலோரியில் இருந்து 2153 கலோரியாக குறைந்தது. 2009-10 ம் ஆண்டில் கிராமப்புறங்களில் உணவில் ஊட்டச்சத்தின் அளவு 2071 கலோரியாகவும், நகர்புறங்களில் 1946 கலோரியாகவும் குறைந்துள்ளது. தேசிய உணவு மாதிரி ஆய்வு கழகம் நடத்திய 66 கட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment