Search This Blog

Wednesday, 30 October 2013

தீபாவளி அன்று "டாஸ்மாக்' சரக்கு விற்பனை நிச்சயம்: "குடி' மக்களிடம் இருந்து 4 நாளில் 400 கோடி ரூபாய் எதிர்பார்ப்பு

தீபாவளி அன்று "டாஸ்மாக்' சரக்கு விற்பனை நிச்சயம்: "குடி' மக்களிடம் இருந்து 4 நாளில் 400 கோடி ரூபாய் எதிர்பார்ப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில், 12 நாட்களுக்கு தேவையான, மதுபானங்களை இருப்பு வைக்க, உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளி தினமான, 2ம் தேதி அன்று, ஒரே நாளில், 150 கோடிக்கு, சரக்கு விற்பனையாகும் என்றும்,1ம் தேதி முதல், 4ம் தேதி வரையிலான, நான்கு நாட்களில், மொத்தம், 400 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன; நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகிறது. டாஸ்மாக் கடைகளில், முன்பு, 90 நாட்களுக்கு தேவையான மது வகைகள், இருப்பு வைக்கப்பட்டன. பார் உரிமையாளர், பணம் கொடுக்காமல் மது வகைகளை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல்,விற்பனை விவரத்தை, ஊழியர்கள் மறைத்தல் உள்ளிட்ட முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஏழு நாட்களுக்கு தேவையான மது வகைகள் மட்டுமே, இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டது. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகை போன்ற, விசேஷ தினங்களில், டாஸ்மாக் கடைகளில், வழக்கத்தை விட, மது வகைகள் விற்பனை அமோகமாக இருக்கும். வரும் சனிக்கிழமை, தீபாவளி பண்டிகை; வெள்ளிக்கிழமை முதலே, டாஸ்மாக் கடைகளில், மது வகைகள் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும். தட்டுப்பாடு ஏற்பட்டு விட கூடாது என்பதால், 12 நாட்களுக்கு தேவையான, மது வகைகளை, டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது:கடைகளில், அதிகம் விற்பனையாகும் மதுவகைகள் குறித்த புள்ளி விவரம் திரட்டப்பட்டு, அதன் அடிப்படையில், டிப்போக்களில் இருந்து, மது வகைகள் அனுப்பப்படுகின்றன. வெள்ளி முதல் திங்கள் வரை, நான்கு நாட்களில், 400 கோடி ரூபாய் மதிப்பிற்கு, மதுவகைகள்விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தீபாவளி பண்டிகையன்று மட்டும், 150 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்க வாய்ப்பு உள்ளது.விற்பனையை அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

2008 முதல், கடந்த ஆண்டு வரை தீபாவளியின் போது, விற்பனை விவரம்:
ஆண்டு ரூபாய் (கோடியில்)
2008 46.22
2009 87.13
2010 99.93
2011 103.84
2012 126.51
2013 150* (எதிர்பார்ப்பு)

No comments:

Post a Comment