Search This Blog

Wednesday, 23 October 2013

அப்பிள், அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு நற்செய்தி!

அப்பிள், அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு நற்செய்தி!

சந்தையில் சரிவில் உள்ளது பிளக்பெரி ஸ்மார்ட் போன்கள்.

ஸ்மார்ட் போன்கள் என்றாலே பிளக்பெரி என்று கூறும் காலம் போய்விட்டமை சற்று கவலைக்குரியவிடயமாகும்.

எனினும் இன்றளவும் சிலர் பிளக்பெரியை பலர் உபயோகிக்க அதன் பி.பி.எம் எனப்படும் பிரத்தியேக மெசஞ்சர் சேவை காரணமாக உள்ளது.

இந்நிலையில் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் பிரத்தியேக பி.பி.எம். சேவையை மற்றைய இயங்குதளங்களுக்கும் அறிமுகப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டதைப் போல மெசஞ்சர் சேவையை ஐ.ஓ.எஸ். மற்றும் அண்ட்ரோய்ட் இயங்குதளங்களுக்கும் பிளக்பெரி லிமிடெட் அறிமுகப்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னரே இதனை பிளக்பெரி அறிமுகப்படுத்த எண்ணியிருந்த போதும் சில குளறுபடிகளால் அது தள்ளிப்போனது.

இந்நிலையில் நேற்று அது வெளியாகியுள்ளதுஅதுமட்டுமன்றி வெளியாகி வெறும் 8 மணித்தியாலங்களுக்குள் 5 மில்லியனுக்கும் அதிகமான தடவை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிளக்பெரி லிமிடெட் அறிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 6 மில்லியன் பேர் இச் சேவைக்கென தங்களை முன்பதிவு செய்து கொண்டதாகவும், இம் மெசெஞ்சர் சேவைக்கு கிடைத்துள்ள வரவேற்பும் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் பிளக்பெரி தெரிவிக்கின்றது.

முன்பதிவு செய்தவர்களுக்கு இச்சேவையை வழங்கிவருவதாகவும் மற்றையோர் பின்னர் படிப்படியாக இதனை உபயோகிக்கமுடியுமெனவும் பிளக்பெரி தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment