Search This Blog

Tuesday, 31 December 2013

ஆந்திர செம்மரக் கடத்தலில் 'வீரப்பன் கூட்டாளிகள்'?

ஆந்திர செம்மரக் கடத்தலில் 'வீரப்பன் கூட்டாளிகள்'?

ஹைதராபாத்: ஆந்திர மாநில போலீசாருக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கும் செம்மரக் கடத்தலில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளுக்குத் தொடர்பிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆந்திராவில் சேசாலம் வனப்பகுதியில் அண்மையில் செம்மரக் கடத்தல் கும்பலால் 2 போலீசார் படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 400 பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில காவல்துறை தலைவர் பி. பிரசாத ராவ், செம்மரக் கடத்தலில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர்களுக்காக செம்மரங்கள் கடத்தப்படலாம் என கருதுகிறோம்.
தமிழகம், கர்நாடகாவில் இருந்து கடத்தல்காரர்கள் ஆந்திரா வனப்பகுதிக்குள் ஊடுருவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

No comments:

Post a Comment