உற்பத்தியாளர்கள் அறிவிப்பு : கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பிப்.4 முதல் பால் உற்பத்தி நிறுத்தம்
சேலம்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் செங்கோட்டுவேல் தலைமை வகித்தார். பின்னர் அவர் கூறியதாவது: கடந்த 2011ம் ஆண்டு பால் உற்பத்தி செலவு உயர்வுக்கு ஏற்ப லிட்டருக்கு ரூ.4.50 விலை உயர்த்தப்பட்டது. தற்போது கலப்புத்தீவனம், உலர், பசுந்தீவனம் ஆகியவற்றின் விலையுயர்வு, ஆட்கள் கூலி உயர்வு இவைகளினால் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதித்துள்ளனர். கடந்த 1ம் தேதி பால் விலை உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தோம்.
இதையடுத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பசும்பால், எருமைபால் லிட்டருக்கு தலா ரூ.3 அரசு உயர்த்தியது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பசும்பால் லிட்டருக்கு ரூ.30, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.40 என விலை உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 4ம் தேதி முதல் காலவரையற்ற பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் மற்றும் கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment