Search This Blog

Tuesday, 28 January 2014

மூன்று மாதத்தில் ஸ்டாலின் செத்துவிடுவார் என்று மிரட்டிய மு.க.அழகிரி - கருணாநிதி பேட்டி

மூன்று மாதத்தில் ஸ்டாலின் செத்துவிடுவார் என்று மிரட்டிய மு.க.அழகிரி - கருணாநிதி பேட்டி

மூன்று மாதத்தில் ஸ்டாலின் செத்துவிடுவார் என்று உரத்த குரலில் என் இதயம் நின்றுபோகும்படி மு.க.அழகிரி மிரட்டினார் என்று திமுக தலைவர் கருணாநிதி தன் மகன் மீதே குற்றம்சாற்றியுள்ளார்.

திமுக தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது பற்றி திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மு.க.அழகிரி கட்சி கட்டுப்பாட்டை மீறி தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்தது தவறு. அவர் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு முடிவுக்கு எதிராக செயல்பட்டார். செயலாளர் பொறுப்பை மறந்து செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மு.க.அழகிரிக்கு தி.மு.கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது என்றும் உச்ச கட்டமாக கடந்த 24 ஆம் தேதியன்று விடியற்காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளையெல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார்.

நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்றுவிடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார்.

எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்.

No comments:

Post a Comment