Search This Blog

Thursday, 20 February 2014

தூத்துக்குடி ஆயுதப்படை போலீசாருக்கு ரூ.5.22 கோடியில் குடியிருப்பு வளாகம்

தூத்துக்குடி ஆயுதப்படை போலீசாருக்கு ரூ.5.22 கோடியில் குடியிருப்பு வளாகம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கான குடியிருப்பு கட்ட 2012 நவ., நிதி ஒதுக்கீடு செய்தும் தாமதமாக பணிகள் நேற்று துவங்கின. தூத்துக்குடி ஆயுதப்படை போலீசாருக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு 2012 ல் நடந்த கலெக்டர்கள்,போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாட்டில் குடியிருப்பு வளாகம் கட்டித்தரப்படும், என அறிவிப்பு வெளியிட்டார். அதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. பணிகள் தாமதமாக நேற்று துவங்கின. பணிகள் துவக்கவிழாவில் கலெக்டர் ரவிக்குமார், துரை எஸ்.பி., உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலெக்டர் ரவிக்குமார் கூறுகையில்,""துணைக்கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டருக்கு தலா இரு குடியிருப்புகள், எஸ்.ஐ.,க்களுக்கு 17 குடியிருப்புகள். ஏட்டு, மற்றும் போலீசாருக்கு 437 குடியிருப்புகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பீட்டு தொகையாக 55.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்குள் பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும்,'' என்றார்.

No comments:

Post a Comment