தி.மு.க.,மாஜி ஒன்றிய சேர்மன் மீது கந்து வட்டி வழக்கு பதிவு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மாஜி ஒன்றிய சேர்மன் உமரிக்காடு சங்கர் உட்பட எட்டு பேர் மீது ஏரல் போலீசார் கந்து வட்டி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். உமரிக்காடு சவுந்திரபாண்டியன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன், 35. இவர் மாஜி தி.மு.க., சேர்மன் சங்கரிடம் 10 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்கடனாக பெற்றிருந்தார். வட்டி 18 சதவீதம் கட்டுவதாகவும், பணத்திற்காக ஏரல் ஸ்டேட் வங்கி செக் 10ம் கையெழுத்திட்டு கொடுத்திருந்தார். இதில் 6 லட்சத்து 69 ஆயிரத்து 900 ரூபாய் திருப்பி செலுத்தியுள்ளார். மேலும் வட்டிக் கடனுக்காக முக்காணி பகுதியில் உள்ள நிலத்தையும் சங்கருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் வட்டியும் அசல் தொகையும் செலுத்த கோரி சங்கர், அவரது மனைவி பிரம்மசக்தி, உறவினர் அதிவீரராமபாண்டியன், இவரது மகன்கள் பாஸ்கரன், பிரபாகரன் மற்றும் மூவர் சேர்ந்து மிரட்டியுள்ளனர். இது குறித்து ஏரல் போலீசில் முருகன் புகார் செய்தார் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுத்தார் கோர்ட் உத்தரவுப்படி, ஏரல் போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தி.மு.க., மாஜி ஒன்றிய சேர்மன் சங்கர் மணல் கடத்தல் வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கிழ் கைது செய்யப்பட்டு ஜெயில் தண்டனை பெற்றவர், என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment